பாதியில் ஓடிய மருத்துவர்கள்.. மக்களுக்கு உதவி கிடைக்கும் முன்பே சிரியாவில் போர் தொடங்கியது

சிரியாவில் நடக்கும் போர் தற்போது தொடர்ந்து 10வது நாளாக நடந்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சிரியாவை கூகுளில் அதிகம் தேடிய தமிழர்கள்- வீடியோ

    டமாஸ்கஸ்: சிரியாவில் நடக்கும் போர் தற்போது தொடர்ந்து 10வது நாளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் இரண்டு படைகளாலும் மோசமாக மீறப்பட்டு இருக்கிறது.

    சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

    இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

    பேச்சுவார்த்தை

    இந்த போரை தற்காலிகமாக நிறுத்த ஐநா போன்ற சர்வதேச அமைப்புகள் கடுமையாக போராடி வந்தது. ஆனால் ரஷ்யா கொஞ்சம் கூட இதில் வளைந்து கொடுக்கவில்லை. அதேபோல் வான்வெளி தாக்குதலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.

    5 மணிநேரம்

    இந்த நிலையில் நேற்று ரஷ்ய அதிபர் பபுடின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி தினமும் 5 மணி நேரம் குண்டுகள் எதுவும் போட மாட்டோம். அப்போது மருத்துவ உதவிகள் செய்யலாம், மக்கள் வெளியேறலாம்'' என்று குறிப்பிட்டார். இதற்கு போராளிகள் படையும் ஒப்புக் கொண்டது.

    ஆனாலும் கட்டுப்பாடு

    ஆனால் அதன்பின் புடின் முக்கியமான கட்டுப்பாடு ஒன்றை விதித்தார். நாங்கள் வான்வெளி தாக்குதல் மட்டுமே நடந்த மாட்டோம், ஏவுகணை தாக்குதல், தரைவழி தாக்குதல் எப்போதும் போல நடத்தப்படும் என்று குறிப்பிட்டார். இதற்கு ஐநா சபை கண்டனம் மட்டும் தெரிவித்து இருந்தது.

    யாரும் செல்லவில்லை

    இதையடுத்து காலை 9 மணியில் இருந்து 2 மணி வரை போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அங்கு மருத்துவர்கள், மீட்பு பணியாளர்கள் உள்ளே நுழைந்தார்கள். ஆனால் அதற்குள் இரண்டு படைகளும் மீண்டும் தக்க தொடங்கி இருக்கிறது. 2 மணி நேரம் கூட போர் நிறுத்தம் கடைபிடிக்கப்படவில்லை.

    வீணாய் போனது

    இதன் காரணமாக ஒருவர் கூட மீட்கப்படவில்லை. அதேபோல் இப்போது மருத்துவர்கள் சிலரும் அங்கே மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கே மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

    யார் செய்தது

    இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது யார் என்று இப்போது வரை சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை. அரசு மற்றும் ரஷ்ய படையாள் மீறியது என்று போராளி படைகள் கூறுகிறது, போராளிகள்தான் தாக்கினார்கள் என்று ரஷ்யா கூறுகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக நடந்த அமைதி பேச்சுவார்த்தை எல்லாம் மொத்தமாக உடைந்து போய் இருக்கிறது.

    திமிர்த்தனமான பேச்சு

    அதே சமயத்தில் அமெரிக்க இதில் மிகவும் திமிர்தனமாக பதில் அளித்து இருக்கிறது. வெறும் 5 மணி நேரத்தில் எப்படி மருத்துவ உதவி கொடுக்க முடியும் என்ற கேள்விக்கு, ''போர் நிறுத்தம் இல்லாமல் இருப்பதற்கு கொஞ்ச நேரம் போர் நிறுத்தப்படுவது பெரிய விஷயம் தான்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    மீண்டும்

    ஏற்கனவே ஒரு மாத போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேசப்பட்டது. அப்போதே நாங்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொள்கிறோம் ஆனால் போராளிகள் இருக்கும் தலைநகர் பகுதியில் கண்டிப்பாக குண்டு போடுவோம் என்று ரஷ்ய படை கூறியது. அங்கு மட்டும்தான் போர் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+