வில்லியம் அன்ட் பேமிலிக்காக சாகும் முன்பு டேப்பில் பேசி வைத்த இளவரசி டயானா
லாஸ் ஏஞ்சல்ஸ்: இங்கிலாந்து இளவரசி டயானா தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து தனது மகன் வில்லியம் மற்றும் அவரது வருங்கால மனைவிக்கு அறிவுரை வழங்கி அதை டேப்பில் பதிவு செய்து வைத்தது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்தில் பலியானார். ஆனால் அது விபத்து அல்ல ராஜ குடும்பத்தினரின் சதி என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் டயானா தனது உயிருக்கு ஆபத்து இருப்பது தெரிந்து தனது மூத்த மகன் வில்லியம் மற்றும் அவரின் வருங்கால மனைவிக்கு அறிவுரை வழங்கி அதை டேப்பில் பதிவு செய்து வைத்தது தெரிய வந்துள்ளது.

மரண பயம்
அந்த டேப்பில் பதிவானவற்றை கேட்டால் டயானா மரண பயத்தில் இருந்தது தெரிய வருகிறது. அவர் தனது வாழ்வில் ஏற்படுத்திக் கொண்ட சில எதிரிகளால் அவரின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்திருக்கிறார்.

பேரக் குழந்தைகள்
உங்களின் குழந்தைகளை எனக்காகவும் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களை நான் மிகவும் நேசிப்பேன், பார்த்துக் கொண்டே இருப்பேன் என்பதை அவர்களிடம் தெரிவியுங்கள் என்று டயானா அந்த டேப்பில் வில்லியம் மற்றும் அவரது வருங்கால மனைவிக்காக பேசியுள்ளார்.

'கேட்'டை பார்க்காமலே
டயானா இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன்னை பார்த்ததே இல்லை. வில்லியமின் மனைவி அழகாகவும், அறிவாளியாகவும், யாரையும் சார்ந்திராதவராகவும் இருப்பார் என்று டயானா டேப்பில் தெரிவித்துள்ளார்.

ஸ்பெஷலானவர்
டயானா வில்லியமின் வருங்கால மனைவிக்காக பேசியது: நான் உன்னை கொண்டாடுவேன், நாம் வெகு விரைவில் தோழிகளாவோம் என்று எனக்கு தெரியும். நீ நிச்சயமாக ஸ்பெஷல் ஆனவளாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் என் வில்லியமின் மனைவியாக முடியாது.

பெற்றோரின் அறிவுரை
ஒரு வேளை டயானா தனது மகன்களை வழிநடத்த உயிரோடு இல்லை என்றால் என்ன செய்வது என்று அவரது பெற்றோர் தான் இந்த டேப் அறிவுரையை வழங்கியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications