For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலாவில் பாட்டி வட சுட்டுச்சு... ஆனா அந்த நிலாவையே பூமி 'சுட்டிருச்சாமே'..!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ராத்திரியில் பூத்து நிற்கும் அழகான வெண்ணிலா, வீனஸ் கிரகத்திலிருந்து பூமியால் 'சுடப்பட்டிருக்கலாம்' என்று விஞ்ஞானிகள் தற்போது புதுக் கருத்தை வெளியிட்டுள்ளனர்.

அதாவது பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக, வீனஸிடமிருந்த நிலா, இந்தப் பக்கம் வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கிட்டத்தட்ட 40 லட்சம் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி மீது ஏதோ ஒரு பெரிய பொருள் பலமாக மோதியதாம். அப்படி மோதியது வேறு எதுவும் இல்லை, நிலாதான் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

நிலவு தோன்றிய நேரம்

நிலவு தோன்றிய நேரம்

40 லட்சம் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் நிலவு தோன்றியது. எனவே பூமியின் பாதையில் வந்து விழுந்த பொருள் நிலவுதான் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

வீனஸிடமிருந்து இழுக்கப்பட்டிருக்கலாம்

வீனஸிடமிருந்து இழுக்கப்பட்டிருக்கலாம்

உண்மையில் நமது நிலா, வீனஸிடமிருந்து இழுக்கப்பட்டது என்றும் விஞ்ஞானிகள் சிலர் கருதுகிறார்கள். பூமியின் புவியீர்ப்பு சக்தி காரணமாக இது வந்து விழுந்திருக்கலாம் என்பது அவர்களின் சந்தேகம்.

பெரிய திருட்டுத்தனமா இருக்கும் போலிருக்கே!

பெரிய திருட்டுத்தனமா இருக்கும் போலிருக்கே!

புவியீர்ப்பு விசை காரணமாக வீனஸிலிருந்து பெரிய பகுதியை பூமி இழுத்ததா அல்லது அந்தப் பக்கமாக சுற்றிக் கொண்டிருந்த கிரகத்தை இழுத்து சாட்டிலைட் ஆக மாற்றி விட்டதா என்ற ஆய்வையும் தற்போது விஞ்ஞானிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

சான்ஸே இல்லை.. இப்படியும் சிலர்!

சான்ஸே இல்லை.. இப்படியும் சிலர்!

ஆனால் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று சிலர் கூறுகிறார்கள். காரணம், அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் நிலாவுக்குப் போய்த் திரும்பியபோது அங்கிருந்து எடுத்து வந்த பாறைப் பகுதியை ஆய்வு செய்தபோது அது பூமியின் மண்ணியல் தன்மையை ஒத்திருந்தது என்பதால் பூமிக்கு மிகவும் நெருக்கமானதே நிலா, வீனஸிலிருந்து அது வந்திருக்க முடியாது என்பது இந்த விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

ஒரே ஐசோடோப்புகள்தான்

ஒரே ஐசோடோப்புகள்தான்

பூமிக்கும், நிலாவுக்கும் ஒரே மாதிரியான ஐசோடோப்புகள்தான் இருப்பதாகவும் இவர்கள் சொல்கிறார்கள்.

வீனஸிலிருந்து நிலாவா.. ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

வீனஸிலிருந்து நிலாவா.. ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

ஆனால் வீனஸிலிருந்துதான் நிலா பிறந்திருக்கும் என்ற புதிய கருத்து விஞ்ஞானிகளிடையே பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளதாம்.

இது உண்மை என்றால் பூமியை யாரிடமிருந்து 'சுட்டு' கடவுள் உருவாக்கியிருப்பார்... நினைக்கவே சிலீர்னு இருக்குல்ல...!

English summary
Moon may have originated from Venus, after Earth's gravity captured its natural satellite from the planet, a new theory on lunar history suggests. The theory is in contradiction to the belief that the Earth's moon formed some 4.5 billion years ago when a planet-size body slammed into nascent Earth at high speed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X