Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாக்னர் தலைவர் சாகவே இல்லை! விமான விபத்தே ஒரு செட் அப் தான்! ப்ரிகோஜின் மரணம்! 3 முக்கிய பாயிண்டுகள்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: புதினுக்கு எதிராகக் கலகம் செய்த வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் கொல்லப்பட்ட நிலையில், அவருக்கு என்ன நேர்ந்திருக்கலாம் என்பது குறித்து 3 வகையான தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது.

ரஷ்யாவில் உட்சபட்ச அதிகாரம் கொண்ட நபராக இருப்பவர் புதின். அங்குத் தேர்தல் முறை இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் கூட புதினிடம் தான் அங்கு A டூ Z வரை அனைத்து அதிகாரமும் இருக்கிறது. புதின் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் காலி செய்து விடலாம்.

 Did Prigozhin fake his own death 3 possible explanations Russia watchers came up with

இதற்கு நாம் கடந்த காலங்களில் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.. ரஷ்யாவில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பல முக்கிய தலைவர்களும் காணாமல் போகினர். இதற்கிடையே இந்த வரிசையில் இப்போது வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜினும் இணைந்துள்ளார்.

புதின்: ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகக் கடந்த ஜூன் மாதம் கலகம் செய்தவர் வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின். இருப்பினும், அந்த கலகம் நீண்ட காலம் நீட்டிக்கவில்லை. மாஸ்கோவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தவர்கள் திடீரென கலகத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர். ப்ரிகோஜின் உள்ளிட்ட அனைத்து வாக்னர் வீரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ப்ரிகோஜின் ரஷ்யா திரும்பிய பிறகு அவரது அரை நிர்வாண படத்தை எல்லாம் வெளியிட்டு அசிங்கப்படுத்தினார்கள்.

இந்தச் சூழலில் தான் இப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் ப்ரிகோஜின் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு எம்ப்ரேயர் லெகசி 600 எக்சிகியூட்டிவ் ஜெட் விமானத்தில் சென்ற போது விமானம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் சென்ற விமானத்தில் கடைசி 30 நொடிகள் வரை எந்தவொரு பிரச்சினையும் இல்லை. கடைசி நேரத்தில் தான் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் ப்ரிகோஜின் சென்ற விமானத்தை ரஷ்ய ராணுவமே சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ப்ரிகோஜினுக்கு என்ன நடந்திருக்கும் என்பது குறித்து 3 வகையான கருத்துகள் இப்போது சர்வதேச வல்லுநர்களால் முன்வைக்கப்படுகிறது. அவை என்ன என்பது குறித்து நாம் இப்போது பார்க்கலாம்.

புதின் உத்தரவு: முதலில் ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின் பேரில் நடந்த ஒரு படுகொலையாக இது இருக்கலாம்.. இதுதான் ப்ரிகோஜினுக்கு நடந்திருக்கும் என்றே பலரும் கூறுகிறார்கள். புதின் உத்தரவின் பெயரில் இந்த படுகொலை நடந்திருக்கவே வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்கிறார் டியூக் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் சைமன் மைல்ஸ்.. புதினுக்கு எதிராகக் கலகம் செய்தவருக்கு இப்படியொரு முடிவு கிடைக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று பலரும் முன்பு இருந்தே கூறி வந்தனர்.

ரஷ்யாவில் புதின் ஒரு அசைக்கவே முடியாத சக்தியாகப் பார்க்கப்படுகிறார். அவருக்கு எதிராக ஒருவர் கலகம் செய்தது புதினின் அடிப்படையையே அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ப்ரிகோஜினின் கலகம் முறியடிக்கப்பட்ட போதிலும், அது புதினின் இமேஜை மிகக் கடுமையாக பாதித்ததாகவே அங்கிருந்த பலரும் கூறினர். இதன் காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம். புதின் எப்போதும் தனக்கு எதிராகத் திரும்பியவர்களுக்கு உடனடியாக பதிலடி கொடுப்பார்.. அதன்படி ஒரே மாதத்தில் இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது.

ராணுவத்தின் முடிவு: அடுத்து இரண்டாவது புதினை தவிர மற்ற யாராவது ஒருவர் ப்ரிகோஜினை கொல்ல உத்தரவிட்டிருக்கலாம். ப்ரிகோஜின் கலகம் என்பது புதினுக்கு மட்டுமின்றி அவரை சார்ந்து ரஷ்யாவில் இருக்கும் பல கோடீஸ்வரர்களுக்கும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. எனவே, அவர்களில் யாராவது கூட புதினுக்கு தெரியாமல் ப்ரிகோஜினை தீர்த்துக் கட்ட உத்தரவைப் பிறப்பித்திருக்கலாம்.

குறிப்பாக ராணுவத்தில் இருந்து இந்த உத்தரவு வந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் ப்ரிகோஜின் சென்ற விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று பலரும் கூறுகின்றனர். எனவே, வாக்னர் என்ற தனியார் ராணுவத்தின் தலைவராக இருந்த ப்ரிகோஜினை ரஷ்ய ராணுவத்திற்குள் யாராவது தீர்த்துக் கட்டி இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

சாகவே இல்லை: அடுத்து 3ஆவதாக ஒரு கான்ஸ்பிரசி பரவி வருகிறது. அதாவது ப்ரிகோஜின் உயிரிழப்பே மொத்தமாகப் பொய்யாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது தனக்கு புதின் உள்ளிட்டோரால் ஆபத்து இருப்பதை உணர்ந்த ப்ரிகோஜினே போலியாக உலகிற்குத் தான் இறந்ததை போலக் காட்டிக் கொள்ள இந்த விபத்தை செட்அப் செய்திருக்கலாம் எனச் சிலர் கூறுகிறார்கள்.

இது கேட்க கான்ஸ்பிரசி போல இருந்தாலும் ரஷ்யாவில் இதையும் நம்மால் நிராகரிக்கவே முடியாது. கடந்த காலங்களில் பல நிகழ்ச்சிகளில் ப்ரிகோஜின் பல்வேறு காரணங்களால் தன்னை போலவே இருக்கும் நபர்களை தனக்குப் பதிலாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைத்துள்ளார் என்பதால் இதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+