Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு ஊரே ஒரு குடியிருப்பில்.. சீனாவில் 21000 பேர் வசிக்கும் ரீஜண்ட் இன்டர்நேஷனல் பற்றி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: ஒரு ஊரே ஒரு குடியிருப்பில் இருக்கிறது.. சீனாவில் அமைந்துள்ள 39 தளங்களைக் கொண்ட ரீஜண்ட் இன்டர்நேஷனல் (Regent international) எனும் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 21000 மக்கள் வசித்து வருகின்றனர். நீச்சல் குளங்கள் சூப்பர் மார்க்கெட் சலூன் கடைகள் மற்றும் இன்டர்நெட் மையங்கள் ஆகியவை அனைத்தும் இதிலேயே அமைந்துள்ளது.

சென்னையில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளை பார்க்கும் போது பலரும் ஆச்சர்யத்துடன் யோசிப்பார்கள்.. இவ்வளவு பேருக்கு காய்கறி கடைகள், முடிவெட்டுவது, பால் வாங்குவது, மளிகை சாமான்கள் எப்படி கிடைக்கும். குறிப்பாக இவ்வளவு வீடுக்கு எத்தனை போர் போட முடியும்... அப்படியே போர் போட்டாலும் தண்ணீர் வருமா, தண்ணீர் தேவையை எப்படி தீர்க்கிறார்கள். கார் பார்க்கிங் எப்படி என பல கேள்விகள் எழும். வெறும் ஆயிரம் 500 முதல் 1000 குடியிருப்புகள் இருந்தாலே இவ்வளவு கேள்விகள் நமக்கும் எழும்.

Did you know about regent international apartment which has 21 000 people living in China

வெறும் ஆயிரம் பேர் குடியிருக்கும் அடுக்குமாடி வீடுகளை பற்றி யோசிக்கும் போது தலைசுற்றும் நிலையில், ஒரு ஊரே ஒரு குடியிருப்பில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. அதுவும் ஒரே குடியிருப்பில் சுமார் 21000 பேர் வசிக்கிறார்கள் என்றால் யோசித்து பாருங்கள். மேலும் 10000 பேர் குடியிருக்க முடியும். சீனாவில் இந்த பிரம்மாண்ட பங்களா இருக்கிறது.

சீனாவின் கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் ரீஜண்ட் இன்டர்நேஷனல் கட்டிடம் இருக்கிறது. ஹாங்சோவின் மத்திய வணிக மாவட்டத்தில் அமைந்துள்ள குடியிருப்புகளில மொத்தம் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர், மேலும் 10,000 பேர் தங்குவதற்கு இடவசதி இருக்கிறது. இது குடியிருபில் வாழ்பவர்களுக்கு தேவையான அத்தனை வசதிகளும் அங்கு இருக்கிறது. அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவே தேவையில்லை... சூப்பர் மார்க்கெட் வேண்டுமா இருக்கிறது. உங்கள் தலைமுடியை வெட்டுவதற்கான இடம் வேண்டுமா அதுவும் இருக்கிறது. நீச்சல் குளம்.. அதுவும் இருக்கிறது. இன்டர்நெட் மையங்கள். வீட்டிற்குதேவையானை அனைத்து பொருட்களையும் வாங்கும் இடம் மற்றும் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அண்மையில் இந்த பிரம்மாண்ட ரீஜண்ட் இன்டர்நேஷனல் கட்டிடத்தின் ட்ரோன் காட்சிகள் அங்குள்ள வீடுகளின் எண்ணிக்கையை வெளிப்படுத்தின. அந்த குடியிருப்பில் மொத்தம் உள்ள குடியிருப்பில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.

சரிஇ ரீஜண்ட் இன்டர்நேஷனலில் வசிக்கும் மக்கள் யார்? இங்கு குடியிருப்பவர்களை 'ஹேங் பியாவோ' என்று குறிப்பிடப்படுகிறார்கள். அதாவது ஹாங்ஜோவுக்கு வேலை தேடி சென்றவர்களை இப்படி குறிப்பிடுகிறார்கள். இந்த கட்டிடத்தில் அதிக எண்ணிக்கையிலான பட்டதாரிகள் மற்றும் தொழில் செய்பவர்கள் குடியிருக்கிறார்கள். இன்ஸ்டா, ட்விட்டர், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் இந்த கட்டிடம் வேகமாக பரவ தொடங்கியதால் பலரும் , ரீஜண்ட் இன்டர்நேஷனல் கட்டிடம் பற்றி இப்போது தேடும் ஆர்வம் அதிகமாக உள்ளது.

தி ரீஜண்ட் இன்டர்நேஷனல் குடியிருப்பில் உள்ளவர்களின் வாழ்க்கைச் செலவு குடியிருப்புகளை பொறுத்து மாறுபடுகிறது.. கட்டிடத்தில் நீங்கள் எங்கு வசிக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும். ஜன்னல்கள் இல்லாத சிறிய அடுக்குமாடி வீடுகளுக்கு வழக்கமாக மாதத்திற்கு 210 டாலர் செலவாகும். இந்திய மதிப்பில் 17,495 ரூபாய் மாதம் மாதம் நீங்கள் குடியிருக்க செலவு செய்ய வேண்டியதிருக்கும்

அதேநேரம் ஜன்னல் வசதியுடன், சூரிய ஒளியை தினமும் பார்க்க ஆசைப்பட்டால் பால்கனிகளுடன் கூடிய பெரிய வீடுகளுக்கு வாடகையா மாதம் 570 டாலர் செலவாகும். அதாவது இந்திய மதிப்பில் சொகுசு வீடுகளுக்கு வாடகையாக மட்டும் 47,486 ரூபாய் செலவு செய்ய வேண்டியதிருக்கும்.

கட்டிடம் 675 அடி உயரத்துடனும் 260,000 சதுர மீட்டர் அகலத்துடன் அமைத்துள்ளது. இது சீனாவின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஏழு நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றான சிங்கப்பூர் சாண்ட்ஸ் ஹோட்டலின் தலைமை வடிவமைப்பாளரான அலிசியா லூ என்பவரால் முதலில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது. முதலில் ஆறு நட்சத்திர ஹோட்டலாக இருக்க வேண்டும் என்று கட்டப்பட்டது. ஆனால் குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+