"அது" பக்கத்திலேயே.. வெறும் பிளேடுதானாம்.. இருட்டு ஹோட்டலில் இளம்பெண் செய்த பகீர்.. அலறி ஓடிய நபர்
டோக்கியோ: இருள் சூழ்ந்த ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றில் இளம்பெண் செய்த காரியத்தை பார்த்து, ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.. யாரந்த பெண்?
ஜப்பானில் புகழ்பெற்ற இடம் சுசுகீனா.. இது ஒரு சுற்றுலாதலம் என்பதால், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம்.
இங்குள்ள ஒரு ஊரில் புகழ்பெற்ற கஃபே ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த ரெஸ்ட்டாரெண்ட்டில் வேலை பார்க்கும் இளம்பெண், அந்த பகீர் காரியத்தை செய்து வந்துள்ளார்.

ரெஸ்ட்டாரெண்ட்: இவர் அந்த ரெஸ்டாரண்ட்டுக்கு வருபவர்களுக்கு மது பரிமாறுபவர்.. வெயிட்ரஸ் என்பார்கள்.. இந்த பெண்ணிடம் விபரீத பழக்கம் ஒன்று இருக்கிறது.. அதாவது, கஸ்டமர்களுக்கு மது பரிமாறும்போது, திடீரென பிளேடை எடுத்து, தன்னுடைய விரல்களை கட் செய்து கொள்வாராம்.. அதாவது விரல்களை பிளேடை வைத்து கிழித்து விடுவாராம்... இதில் காயத்தில் இருந்து கொட்டும் ரத்தத்தை கஸ்டமர்களுக்கு கொண்டு போய் கொடுக்கும் அந்த மதுவில் கலந்து விடுவாராம்... கஸ்டமர்களும் இது தெரியாமல் அப்படியே குடித்துவிடுவார்களாம்..
இப்படியே 3 வருடங்களாக இந்த பெண், தினமும் கஸ்டமர்களுக்கு காக்டெயிலில் தன்னுடைய ரத்தத்தை கலந்து தந்து வவந்துள்ளார்.. பொதுவாக, ரெஸ்டாரண்ட்கள் + பார்கள், இருட்டாகவே இருக்கும் என்பதால், இந்த பெண் செய்வதை இதுவரை யாருமே கண்டுபிடிக்காமலும் இருந்திருக்கிறார்கள்.. இப்படித்தான் சில தினங்களுக்கு முன்பு, வழக்கம்போல் பிளேடை எடுத்து, தன்னுடைய விரலை கிழித்து, வழியும் ரத்தத்தை, கஸ்டமர்களின் மதுவில் கலந்து கொண்டிருந்தார்..
கைவிரல்களை கிழித்து: விரல்களில் இருந்து சொட்டு சொட்டாக ரத்தம், அந்த மதுவில் விழுந்து கொண்டிருந்தது.. அப்போது, திடீரென அங்கிருந்த ஒரு கஸ்டமர் இதை பார்த்துவிட்டார்... இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர், நேரடியாகவே அந்த பெண்ணிடம் சென்று அதை பற்றி கேட்டார்.. ஆனால், அந்த பெண்ணோ, கஸ்டமரை பதிலுக்கு மிரட்டினார்.. ஏற்கனவே இருட்டு ரெஸ்டாரண்ட்டில், ரத்தத்தை கண்டு பயந்துபோன அந்த கஸ்டமர், இந்த பெண் இப்படி மிரட்டவும், விழுந்தடித்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டார்..

பிறகு தன்னுடைய நண்பர்களிடம் நடந்த சம்பவத்தை சொல்லி உள்ளார்.. அவர்களும் அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்து, ரெஸ்ட்டாரண்ட் நிர்வாகத்திடமே இந்த விஷயத்தை வந்து சொல்லி உள்ளார்கள்.. உடனே ரெஸ்ட்டாரெண்ட் ஊழியர்கள், அந்த பெண்ணை அழைத்து நடந்ததெல்லாம் உண்மையா? என்று கேட்டார்கள்.. அந்த பெண்ணும், ஆமாம், என்று கூலாக பதில் சொன்னார்..
சஸ்பெண்ட் : இதையடுத்து, அப்பெண் ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்த ரெஸ்டாரண்ட் நிர்வாகம், அவர் மீது போலீஸிலும் புகார் தந்தது.. அதுமட்டுமல்லாமல், இப்படியொரு விஷயம் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்திருப்பதை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பகிரங்கப்படுத்தியது.. இதை கேள்விப்பட்டு, ஜப்பானே அதிர்ந்துபோய்விட்டது.. அதுவும், அந்த ரெஸ்ட்டாரெண்ட்டுக்கு இதுவரை சென்று வந்த கஸ்மர்கள், இதை கேள்விப்பட்டு வெலவெலத்து போய்விட்டார்கள்..

அவர்களெல்லாம் அலறி அடித்துக் கொண்டு, மருத்துவமனைக்கு ரத்தப்பரிசோதனை செய்து வருகிறார்கள்... பொதுவாக, இப்படி பிறரின் மனித ரத்தம், வாய்க்குள் சென்றால், எய்ட்ஸ், ஹெபடிட்டிஸ் பி, ஹெபடிட்டிஸ் சி, சிப்ஹில்லிஸ் போன்ற நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் கதிகலங்கி போயுள்ளார்களாம் அந்த "ரத்த அமானுஷ்ய காக்டெயிலை" குடித்த கஸ்டமர்கள்..!!!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications