திருட்டுப் புகாரில் சிக்கிய மாரடோனாவின் மாஜி காதலி கைது... மாரடோனா அடித்ததாக புகார்!
பியூனஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டியகோ மாரடோனாவின் முன்னாள் காதலி ரோசியோ ஒலிவா, பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
மாரடோனா துபாயில் அளித்த திருட்டு புகாரின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
"நேற்று மாலை 7.20 மணியளவில் அர்ஜெண்டினா வந்தடைந்த ரோசியோ ஒலிவா போலீசாரால் கைது செய்யப்பட்டார்" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

53 வயதான மாரடோனாவின் 22 வயது முன்னாள் காதலிதான் கைது செய்யப்பட்டுள்ள ஒலிவா. தன்னுடைய துபாய் வீட்டில் இருந்து வாட்சுகள், வைர காதணி ஆகியவற்றை ரோசியோ திருடி விட்டதாக மாரடோனா புகார் அளித்திருந்தார்.
அப்புகாரின் அடிப்படையில் துபாய் அரசு அவருக்கு பிடிவாரண்ட்டை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் ரோசியோ கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், தன் மீதான புகாரினை மறுத்துள்ள ரோசியோ, மாரடோனாதான் தன்னை அடித்ததாகவும், அதனை மறைக்கவே இந்தப் பொய் புகாரினை தெரிவித்துள்ளதாகவும் பதில் புகார் அளித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications