நீங்க தானே அனுமதி கொடுத்தீங்க.. பதைபதைப்புடன் இந்திய கப்பலில் இருந்து ஈரானுக்கு போன கால்.. வெளியான ஆடியோ
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற இந்திய கப்பல்கள் இரண்டின் மீது ஈரான் கடற்படை தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்கியதும், அந்த கப்பலில் இருந்து ஈரானுக்கு அவசர கால அழைப்பு சென்றுள்ளது. நீங்கள்தானே அனுமதி கொடுத்தீர்கள் என்று அவர் பேசும் 30 நொடி ஆடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையே பாகிஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

30 வினாடிகள் ஆடியோ வெளியானது
இதற்கிடையே, லெபனான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மூடி வைத்து இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக இரு தினங்களுக்கு முன்பாக ஈரான் அறிவித்தது. ஆனால், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகைவியிடுவதை கைவிட மறுத்ததால் முடிவில் இருந்து பின் வாங்கிய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் என்று தெரிவித்தது.
இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற இந்திய கப்பல்கள் இரண்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஈரானின் தாக்குதலுக்கு உள்ளான கப்பல் ஒன்றில் இருந்து ஈரானுக்கு போன அவசர அழைப்பின் உரையாடல்கள் வெளியாகியுள்ளன. ஆபத்தான (distress) நேரங்களில் விடுக்கப்படும் அவசர அழைப்பாக இது சென்றுள்ளது. 30 வினாடிகள் கொண்ட இந்த உரையாடலில், இந்திய கப்பல் ஒன்றில் இருந்த சிப்பந்திகளில் ஒருவர் ஈரான் கடற்படையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
நீங்கள்தானே ஒப்புதல் கொடுத்தீர்கள்
அந்த உரையாடலில், செபாஹ் நேவி, செபாஹ் நேவி, இது சன்மார் ஹெரால்ட் மோட்டார் டேங்கர்.. நீங்கள்தானே ஒப்புதல் கொடுத்தீர்கள். உங்கள் பட்டியலில் எனது பெயர் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது தாக்குதல் நடத்துகிறீர்கள். என்னை திரும்பி போக அனுமதியுங்கள்.. என்று பேசும் ஆடியோ வெளிவந்துள்ளது. அந்த கப்பல் ஹார்மூஸ் ஜலசந்தியின் கிரீன் ஏரியாவில் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அந்த டேங்கர் கிழக்கு நோக்கி பயணிக்கும் போது தனது தானியங்கி அடையாள அமைப்பை அணைத்து விட்டு பிறகு, கிழக்கு பகுதியை அடைந்ததும் அதை மீண்டும் ஆன் செய்து இருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு கப்பல் ஜாக் அர்னவ் என்ற டேங்கர் என்று அடையாளம் தெரிந்துள்ளது. ஈரான் நடத்திய தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கவலை தெரிவித்த இந்தியா
இந்திய கப்பல்களை குறிவைத்து நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், உடனடியாக ஈரானுக்கான தூதரை நேரில் அழைத்து இந்தியா தனது கவலையை தெரிவித்தது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், "வணிகக் கப்பல்களின் போக்குவரத்து மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவுக்கு வர இருந்த பல கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க ஈரான் இதற்கு முன்பாக உதவியுள்ளது" என்றும் தெரிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகர காவல் படைக்கு சொந்தமான 2 படகுகள் திடீரென இந்திய கப்பல்கள் மீது நடத்திய தாக்குதலில் கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் சேதம் அடைந்தன. மற்றொரு கப்பலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. சிறிய ரக ஏவுகணை மற்றும் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்காமல் இந்திய கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் நிறுத்தப்பட்டன. அந்த வகையில் 13 கப்பல்கள் அந்த பகுதியில் நிற்பதாக தரவுகள் கூறுகின்றன.
-
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications