ஒரு ஒயின் பாட்டில்.. புஸுபுஸுன்னு உயிரோடு ஒரு பாம்பு.. திரில் வீடியோ பாஸ்... பாருங்க..!
பெய்ஜிங்: பாம்பு ஒயின் தயாரிப்பதற்காக உயிருள்ள பாம்பு ஒன்றை ஒயின் நிரம்பிய பெரிய சைஸ் பாட்டிலில் அடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சீனாவில் வன விலங்குகளின் உடல் உறுப்புகளில் இருந்து அதிகளவு இயற்கை மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அவர்களுடைய இயற்கை மருத்துவமானது முழுக்க முழுக்க வனவிலங்குகளைச் சார்ந்துள்ளது. புலியின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து ஆண் களின் ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதாக அவர்கள் நம்புகின் றனர்.
இதேபோல், பாம்புகளை பாட்டிலில் அடைத்து அதில் ஒயினை ஊற்றி பாம்பு ஒயின் தயாரிக்கின்றனர். இந்த ஒயின் அதிக போதையை தருவதாகவும், ஆண்மையை அதிகரிக்க உதவுவதாகவும் அந்நாட்டு மக்கள் நம்புகின்றனர்.

பாம்பு ஒயின் தயாரிப்பு...
பாம்பு ஒயின் இரு வகைகளில் தயாராகிறது. விஷமுள்ள பாம்பை உயிரோடு பிடித்து பெரிய ஒயின் ஜாருக்குள் போட்டுவைத்து பல மாதங்கள் கழித்து குடிப்பது ஒருவகை. அதன் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை வெட்டி ஒயினுக்குள் போட்டு வைத்து குடிப்பது மற்றொரு வகை. உடலை வெட்டி ரத்தத்தை ஒயினுடன் கலந்து வைப்பதும் உண்டு.

விடியோ...
இவ்வாறு உயிருள்ள பாம்பு ஒன்றை ஒயின் நிரம்பிய பெரிய கண்ணாடி ஜாடிக்குள் அடைத்து வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆண் மற்றும் பெண் ஒருவர் சேர்ந்து இந்தச் செயலை செய்கின்றனர்.

கொஞ்சம் கொஞ்சமாக...
பாலீதின் கவரில் கொண்டு வரப்பட்ட பாம்பை இருவரும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒயின் பாட்டிலில் இறக்குகின்றனர். பின்னர் அந்த பாட்டிலின் வாயை மூடி கொண்டு அடைத்து விடுகின்றனர்.

சுற்றிச் சுற்றி வரும் பாம்பு...
உயிருக்காக ஒயின் பாட்டிலுக்குள் சுற்றிச் சுற்றி வருகிறது அந்தப் பாம்பு. அதன் வாயிலிருந்து பெரிய பெரிய காற்றுக் குமிழிகள் வருவதும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

அம்மாடியோவ்...
இணையத்தில் வெளியான இந்த வீடியோவை 10 தினங்களில் சுமார் 34 கோடி மக்கள் பார்த்துள்ளனர்.

பாம்பு ஒயின் பறிமுதல்...
இந்தியாவில் பாம்புகளை கொல்வதோ, பாம்பு ஒயின் சப்ளை செய்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் அடிக்கடியும், சென்னையில் அவ்வப்போதும் இதுபோன்ற பாம்பு ஒயின்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஸ்டார் ஹோட்டல்களில் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications