கடலில் விழுந்த ஏர்ஏசியாவின் மற்றொரு கருப்பு பெட்டியும் மீட்பு
ஜகர்தா: இந்தோனேசிய கடலில் விழுந்து மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் கருப்பு பெட்டியின் மற்றொரு பாகம் இன்று மீட்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி 162 பேருடன் இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் க்யூஇசட்8501 ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜாவா கடலில் இருந்து இதுவரை 48 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் விமானத்தின் வால் உள்ளிட்ட பாகங்களும் மீட்கப்பட்டன. இந்நிலையில் திங்கட்கிழமை விமானத்தின் கருப்பு பெட்டியின் ஒரு பாகமான டேட்டா ரெக்கார்டர் மீட்கப்பட்டது. கருப்பு பெட்டியின் மற்றொரு பாகமான காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் அதாவது விமானிகள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியவற்றை பதிவு செய்த கருவி கிடைக்கவில்லை.
வாய்ஸ் ரெக்கார்டர் கருவி கிடந்த இடம் தெரிந்தபோதிலும் அதை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானம் விபத்துக்குள்ளாக என்ன காரணம் என்பது தெரிய வரும்.
விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது என்று தான் இதுவரை கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications