Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஎன்ஏ திருட்டு பயத்தில் கிம் ஜாங் உன்! புதின் சந்திப்பில் உதவியாளர்கள் செய்த சம்பவம்.. வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இன்று சீனாவில் வைத்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். மீட்டிங் முடிந்து கிம் ஜாங் உன் இருக்கையில் இருந்து எழுந்தவுடன் உதவியாளர்கள் அவர் தண்ணீர் குடித்த டம்ளரை தூக்கி சென்றதோடு, அவர் அமர்ந்து இருந்த இருக்கையை கிருமிநாசினி கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரவி வரும் நிலையில் கிம் ஜாங் உன்னின் டிஎன்ஏ ரகசியத்தை காக்க அவர்கள் இப்படி செய்ததாகவும், அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவலும் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு நடுவே சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

dna-theft-fear-kim-jong-un-aides-cleaning-his-seat-and-every-object-he-touches-when-meeting-with-vla

இந்த மாநாடு ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ம் தேதி நடந்தது. மோடி, சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் தனித்தனியாக பேசினார். அதன்பிறகு மோடி நேற்று முன்தினம் நாடு திரும்பினார். இதன்மூலம் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா - ரஷ்யா - சீனா கைகோர்த்துள்ளது.

சீனாவில் கிம் - புதின் சந்திப்பு

இதையடுத்து அமெரிக்காவின் மற்றொரு எதிரியான வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சீனாவுக்கு சென்றார். இவர் நேற்று முன்தினம் சீனா சென்றார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை தோற்கடித்ததை சீனா கொண்டாடும் வகையில் இன்று ராணுவ அணிவகுப்பு மரியாதை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிம் ஜாங் உன் பங்கேற்றனர். அவர்கள் ஜி ஜின்பிங் உடன் சேர்ந்து ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். ராணுவ அணிவகுப்பு மரியாதைக்கு பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இருதரப்பு உறவு பற்றி பேசினர்.

கிம் இருக்கையை சுத்தம் செய்த உதவியாளர்கள்

அடிப்படையில் ரஷ்யா மற்றும் வடகொரியா நட்பு நாடுகளாக உள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு வடகொரியா வெளிப்படையாக உதவி செய்துள்ளது. வடகொரியாவில் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்படியான சூழலில் இன்றைய இந்த பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடந்து முடிந்தது. இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு புதின் - கிம் ஜாங் உன் ஆகியோர் புறப்பட்டு சென்றனர்.

அந்த சமயத்தில் கிம் ஜாங் உன்னின் உதவியாளர்கள் 2 பேர் விரைந்து விரைவாக அவர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்றனர். பெண் உதவியாளர் கிம் ஜாங் உன் குடித்த தண்ணீர் கிளாசை எடுத்து சென்றார். ஆண் உதவியாளர் கிம் ஜாங் உன் அமர்ந்திருந்த இருக்கையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தார். இருக்கை மட்டுமின்றி கிம் ஜாங் உன் கையால் தொட்ட மேஜையையும் அவரது உதவியாளர்கள் கிருமி நாசினி கொண்டு துடைத்து எடுத்தனர்.

வெளியான வீடியோ

இதனை அங்கிருந்த ரஷ்ய பத்திரிகையாளர் அலெக்சாண்டர் யூனாஷேவ் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் தனது சேனலில் வெளியிட்டதோடு, ‛‛கிம் ஜாங் உன்னின் எந்த தடயமும் இல்லாத வகையில் அவரது உதவியாளர்கள் இருக்கை மற்றும் மேஜையை துடைத்தெடுத்தனர்'' என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை பலரும் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தற்போது பேசும் பொருளாகி உள்ளது. கிம் ஜாங் உன்னின் உதவியாளர்களின் பின்னணியில் உள்ள சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் டிஎன்ஏ திருட்டு பயத்தால் அவர் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பின்னணி என்ன?

அதாவது கிம் ஜாங் உன் அமெரிக்காவை தொடர்ந்து மிரட்டி வருகிறார். இதனால் எப்போது வேண்டுமானாலும் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். மேலும் உடலில் இருந்து விழும் முடி, வியர்வை உள்ளிட்டவற்றை வைத்து ஒருவரின் டிஎன்ஏவை கண்டுபிடிக்க முடியும்.

அதோடு அந்த டிஎன்ஏவை வைத்து ஒருவருக்கு இருக்கும் உடல்நல பாதிப்புகளை அறிய முடியும். இதனால் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை யாரும் அறியக்கூடாது என்பதற்காக அவரது உதவியாளர்கள் இத்தகைய செயல்களை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புதின் செய்தது போல்..

மேலும் இப்படியான செயலை கிம் ஜாங் உன் மட்டும் செய்வது இல்லை. பல தலைவர்கள் இந்த முறையை பின்பற்றி வருகின்றனர். சமீபத்தில் கூட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்காவின் அலஸ்காவிற்கு சென்று அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார்.

அப்போது அவரது காவலாளிகள் அவரது சிறுநீர் மற்றும் மலத்தை சேகரித்து ரஷ்யாவுக்கு கொண்டு சென்றனர். புதினின் உடல்நலம் குறித்த விவரங்கள் பிற நாட்டினருக்கு தெரியாமல் இருக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பாணியை தான் கிம் ஜாங் உன்னும் கடைப்பிடித்து இருக்கலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+