புடினுடன் டாய்லெட்டுக்கு போன 6 பேர்? அப்படியே "அதை" கையில் அள்ளி.. பார்சல் அனுப்பி! பரபர சம்பவம்
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடினின் உடல் நிலை குறித்த பல்வேறு செய்திகள் வரும் நிலையில்தான், அவரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளது.
இதுவரையிலான போரில் ரஷ்யாவின் கையே ஓங்கி உள்ளது. ரஷ்யா பின்னடைவை சந்தித்தாக கூறப்பட்டாலும், அந்நாடு திட்டமிட்டு செயல்படுத்தாகவே சர்வதேச அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

உடல்நிலை
உக்ரைன் போருக்கு இடையில் ரஷ்ய அதிபர் புடின் மிகவும் தனியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதிபர் புடின் யாருடனும் பேசுவது இல்லை. அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பது போல தெரிகிறது என்று சிஐஏ மற்றும் யு.கே அதிகாரிகள் ஏற்கனவே பல்வேறு அமெரிக்கா ஊடகங்களில் தெரிவித்து இருந்தனர். அவர் பொது இடங்களுக்கு வருவதை தவிர்ப்பதாகவும், அவருக்கு பார்கின்சன் பாதிப்பு இருக்கலாம் என்றும் டெய்லி மெயில் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

நோய் பாதிப்பு
இந்த பாதிப்பிற்கு அவர் எடுத்த மருந்து காரணமாக அவரின் மன நிலையில் குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம். அவர் பார்கின்சன் பாதிப்பிற்கு ஸ்டெராய்ட் மருந்துகளை எடுத்து வருகிறார் என்று தோன்றுகிறது. இதனால் அவருக்கு டிமெண்டிஷியா எனப்படும் மறதி வியாதி ஏற்பட்டு இருக்கலாம் என்று டெய்லி மெயில் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடமாகவே அவருக்கு இந்த பாதிப்புகள் இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

வெளிநாட்டு பயணம்
ரஷ்ய அதிபர் புடினின் உடல் நிலை குறித்த பல்வேறு செய்திகள் வரும் நிலையில்தான், அவரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதன்படி புடின் வெளிநாடு செல்லும் போது, அவரின் பாடிகார்ட்ஸ் 6 பேர் அவர் கழிப்பறை செல்லும் இடங்களில் எல்லாம் உடன் செல்வார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . இதை பற்றி பாரிஸ் மேட்ச் தொடங்கி பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புடினின் மலத்தை எடுக்க இவர்கள் உள்ளே செல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாடு
வெளிநாடுகளில் புடினின் மலத்தை வைத்து உளவாளிகள் யாரும் அவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட கூடாது. அவருக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்று கண்டுபிடித்துவிட கூடாது என்பதால் அவருடன் மலத்தை 6 பேர் எடுத்து, அதை பார்சல் செய்து, ரஷ்யாவிற்கு அனுப்பிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த முறை 2017ல் இருந்து வழக்கத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புடின் நோய்
2017ல் புடின் பிரான்ஸ் சென்ற போதும், பின்னர் சவுதி போன்ற நாடுகளுக்கு சென்ற போதும் அவருடன் கழிப்பறைக்குள் 6 பேர் வரை சென்றனர். இதில் கழிப்பறையில் இருந்து சிறிய சூட்கேஸ் ஒன்று வெளியே கொண்டுவரப்பட்டது. ஒவ்வொருமுறையும் அவர் வெளிநாட்டில் கழிப்பறைக்கு செல்லும் போது இப்படி சூட்கேஸ் கொண்டு வரப்படுவது வழக்கமாகி உள்ளது. அவரின் மலம் இதில் பார்சல் செய்யப்பட்டு இருக்கலாம் என்று ஊடக செய்திகளில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications