65000 காபி கப்கள்.. ஏற்கனவே நொந்து போயிருக்காரு எலான் மஸ்க்.. இப்ப இது வேறயா? குண்டை போட்ட மேனேஜர்
பெர்லின்: திடீரென ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது எலான் மஸ்க்கின் டெஸ்லா கம்பெனி.. என்ன நடந்தது? எப்படி நடந்தது?
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார்... அதாவது, பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட், மற்றும் எலான் மஸ்க் இவர்கள் 2 பேருமே உலக பணக்காரர்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடம் பிடித்து வருபவர்கள்.

நிறுவனங்கள்: அந்தவகையில், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையில் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க், எக்ஸ் தளம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது.
அதிலும் ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கிய நாளிலிருந்தே, தினந்தோறும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அவரது பெயர் மீடியாவில் பரபரப்பான செய்திகளாகி வருகின்றன.. இப்போதுகூட 2 விதமான செய்திகள் வட்டமடித்து வருகின்றன..
அலுவலக பொருட்கள்: அதாவது ட்விட்டர் அலுவலக பொருட்களை எல்லாம் எலான் மஸ்க் ஏலம் விடப்போகிறாராம்.. ட்விட்டர் பறவை, ஒரு ப்ரொஜெக்டர், ஐமேக் டிஸ்பிளே, காபி இயந்திரங்கள், நாற்காலிகள், ஃபிரிட்ஜ், பிட்சா மேக்கர் இப்படி கிச்சன் பொருட்கள் அனைத்தும் ஏலம் விடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த ஏலம் வரும் ஜனவரி மாதத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் என்றும், இந்த ஏலத்தை முன்னணி ஏல விற்பனை நிறுவனம் ஒன்று மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. 25 முதல் 50 டாலர்கள் விலையில் இருந்து ஏலம் தொடங்குமாம்.
கிளவுட் சேவை: சுமார் 1 பில்லியன் டாலர்கள் அளவுக்கான செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவன குழுவினரிடம் சொல்லியிருக்கிறாராம்.. அவர்களும் நிறுவனத்தின் கிளவுட் சேவை தொடங்கி செலவுகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. அதனால்தான், இப்படியொரு ஏலம் விற்பனை நடத்தப்போகிறார்களாம்.
ஏற்கனவே, ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில், 10% பணியாளர்களை குறைக்கும் திட்டத்தை எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.. இதைக்கேட்டதிலிருந்தே டெஸ்லா நிறுவனத்தின் ஜெர்மன் ஊழியர்களை கவலையில் உள்ளார்களாம்.. ஏற்கனவே பணிப்பாதுகாப்பு, குறைவான ஊதியம் போன்ற பிரச்சனைகளை ஊழியர்கள் எதிர்கொண்டு வரும்நிலையில், பணியாளர்களை குறைக்கும் திட்டத்தையும் எலான் மஸ்க் கையில் எடுக்க போவதாக தெரிகிறது.
திடீர் மாயம்: இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த நிறுவனத்திலிருந்து 65,000 காபி கோப்பைகள் மாயமாகிவிட்டதாக புகார் ஒன்று கிளம்பியிருக்கிறது.. அந்த ஃபேக்டரின் மேனேஜர் இப்படியோரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.
அதாவது, அந்த ஆலையில் வேலைபார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில், ஒரு ஊழியர் சராசரியாக 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றுவிடுகிறார்களாம். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், ஏற்கனவே ஆட்குறைப்பு, ட்விட்ட பொருட்கள் ஏலம் என நொந்துபோய் எலான் மஸ்க் உள்ள நிலையில், காபி கப்கள் 65,000 மொத்தமாக காணாமல் போயிருப்பது அதற்கு மேல் அவரை கவலைக்கொள்ள செய்துள்ளதாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications