உலகின் மிக பெரிய பண்ணை.. 49 நாடுகளை விட பெரியது! ஆனால் பராமரிப்பது 11 பேர்தான்! அது எப்படி சாத்தியம்

Subscribe to Oneindia Tamil

கான்பரா: உலகில் மிகப் பெரிய பண்ணை நிலம் 49 நாடுகளைக் காட்டிலும் பெரியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த மாபெரும் பண்ணை நிலம் எங்கே இருக்கிறது.. இவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும் எதை எப்படி வெறும் 11 பேர் மட்டுமே பராமரித்து வருகிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நாம் என்னதான் வளர்ந்தாலும் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தான் இன்னுமே பிரதானத் தொழிலாக இருக்கிறது. மனிதர்களுக்குத் தவிர்க்கவே முடியாத அடிப்படைத் தேவையாக இந்த இரண்டும் இருக்கிறது. மாறி வரும் வாழ்க்கை முறையால் பண்ணைகளை நாம் பராமரிக்கும் தொழில்நுட்பமும் மாறி வருகிறது.

Do you know that World s Biggest cattle Farm bigger than 49 countries Run by Just 11 People

உலகின் பெரிய கால்நடைப் பண்ணை

அப்படித் தான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இப்போது உலகில் மிகப் பெரிய பண்ணை நிலத்தை வெறும் 11 பேர் மட்டுமே பராமரிக்கிறார்கள் தெரியுமா! அது எப்படி சாத்தியம்! இந்த உலகின் மிகப் பெரிய பண்ணை நிலம் எங்கே இருக்கிறது.. இதை எப்படி அவர்கள் சாத்தியப்படுத்துகிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவில் தான் இந்த மிகப் பெரிய பண்ணை நிலம் இருக்கிறது. தெற்கு ஆஸ்திரேலியாவின் மையப் பகுதியில் அமைந்துள்ள இடம் அன்னா க்ரீக் நிலையம்.. 15,746 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இதுதான் உலகின் மிகப் பெரிய தனியார் சொத்துக்களில் ஒன்றாகும். மேலும், உலகின் மிகப் பெரிய பண்ணை நிலமாகவும் திகழ்கிறது. அதாவது இந்தப் பண்ணை நிலம் நெதர்லாந்தை விட நீளமானது, வேல்ஸை விட அகலமானது.. இஸ்ரேலை விடப் பெரியதாகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடுமையான வானிலை

இந்தளவுக்கு மிக பெரியதாக இருந்தாலும் அன்னா க்ரீக்கிற்கு சவாலான சூழலே இருக்கும். ஏனென்றால் அங்கு ஆண்டுக்கு வெறும் 20 செமி மழை மட்டுமே பெய்யும். மேலும் கோடைக் காலங்களில் வெப்பம் 55°C, அதாவது 131°Fஐ கூட எட்டுமாம். இந்தளவுக்குக் கடுமையான வானிலை இருப்பதால் இப்பகுதியில் புல் வளர்வதே மிகக் குறைவாகவே இருக்கும். இதனால் அவ்வளவு பெரிய இடத்தில் 17,000 கால்நடைகள் மட்டுமே வளர்க்க முடிகிறது.

ஒரு ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவின் மிகப் பெரிய பண்ணையாக உள்ள அமெரிக்காவில் உள்ள கிங் ராஞ்ச் பண்ணை.. இருப்பினும் இங்கு நல்ல மழை பொழிப்பும் தேவையான காலநிலையும் இருப்பதால் புற்கள் நன்கு வளர்கிறது. இதனால் அங்குச் சுமார் 34 ஆயிரம் கால்நடைகளை வளர்க்க முடிகிறது. ஆனால், இதை விட ஏழு மடங்கு பெரியதாக உள்ள அன்னா க்ரீக்கில் வறட்சியால் இதை விடப் பாதிக்கும் குறைவான கால்நடைகளை மட்டுமே வளர்க்க முடிகிறது.

வெறும் 11 பேர்

இதில் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. இவ்வளவு பெரிய நிலப்பரப்பாக இருந்தாலும் இதை மிகக் குறைந்த ஊழியர்களே பராமரித்து வருகிறார்கள்.. அதாவது சுமார் 59 நாடுகளை விடப் பெரிதாக இருந்தாலும் இந்தப் பண்ணையில் 11 பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள். அதாவது ஒரு மேலாளர், எட்டு ஊழியர்கள், ஒரு ஆபரேட்டர் மற்றும் ஒரு சமையல்காரர் மட்டுமே இதில் வேலை செய்வதாகக் கூறப்படுகிறது.

அது எப்படி

அது எப்படி இவ்வளவு பெரிய இடத்தை வெறும் 11 பேரால் நிர்வகிக்க முடிகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.. அதற்குத் தொழில்நுட்பத்திற்கே நன்றி சொல்ல வேண்டும். இங்குப் பண்ணை முழுக்க ரிமோட் மூலம் இயக்கப்படும் பம்புகள் உள்ளன. மேலும் கால்நடை நடமாட்டத்தைக் கண்காணிக்க டிரோன்கள் உள்ளன. பைக்கில் செல்லும் ஊழியர்கள் கால்நடை நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள். இதுபோல தொழில்நுட்பத்தின் உதவியுடனேயே இவ்வளவு குறைந்த நபர்களை வைத்து பெரிய பண்ணையை பராமரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+