கொரோனா மாதிரி.. மோசமானதா HMPV வைரஸ்? காற்றில் பரவுமா? மாஸ்க் அணிய வேண்டுமா? சிடிசி விடுத்த வார்னிங்
பெய்ஜிங்: கொரோனா பரவி கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவில் HMPV வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூர வைரஸ் மக்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
HMPV வைரஸ் என்பது human metapneumovirus ஆகும். HMPV வைரஸ் அங்கே ஏற்கனவே பரவி வரும் influenza A, Mycoplasma pneumoniae மற்றும் லேசான Covid-19 வைரசுக்கு இடையே இந்த HMPV வைரஸ் பரவி வருகிறது. எங்கள் நாட்டிற்கு பயணம் செய்வது பாதுகாப்பானது.. இதனால் பாதிப்பு இல்லை என்று சீனா கூறி வருகிறது. ஆனால் கொரோனாவிற்கும் இப்படி தான் சீனா கூறியது.

சீனாவில் இளைஞர்கள் இடையே முக்கியமாக சிறுவயதை சேர்ந்தவர்கள் இடையே இது அதிகம் ஏற்படுகிறது. கொரோனா எப்படி பூமர் வைரஸ் என்று அழைக்கப்பட்டது.. அப்படி இது ஜென் ஆல்பா வைரஸ் என்று அழைக்கும் வகையில்.. வயது குறைவானவர்களை இந்த வைரஸ் அதிகம் பாதித்து வருகிறது. பெரும்பாலான குழந்தைகள் சில நாட்களில் குணமடைவார்கள், இருப்பினும் கடுமையான நோய்களுக்கு மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கலாம்.
HMPV காரணமாக இப்போது தொற்று அதிகம் ஏற்பட்டு உள்ளது. சீனாவில் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். என்றாலும் கூட இது ஒரு புதிய வைரஸ் அல்லது உடனடி தொற்று அச்சுறுத்தல் அல்ல. பருவகாலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பு போன்றதுதான். இது சாதாரண கிளைமேட் காய்ச்சல் போன்றதுதான் என்று சீனா மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போது பலருக்கும் சந்தேகம் எழலாம். அதன்படி HMPV பரவுவதால் மாஸ்க் அணிய வேண்டுமா? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதற்கு முதலில் HMPV வைரஸ் எப்படி பரவுகிறது என்று பார்க்க வேண்டும்.
HMPV எவ்வாறு பரவுகிறது?:
HMPV இருமல் அல்லது தும்மல், தொடுதல் அல்லது கைகுலுக்குதல் போன்ற நெருங்கிய தொடர்பு மூலம் பரவும். அசுத்தமான இடங்களில் இந்த வைரஸ் இருக்கலாம், வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலம் பரவும், நீர்த்துளிகள் மூலம் பரவும். இதனால் மாஸ்க் போடுவது பலன் அளிக்கும்.
HMPV வைரஸ் பரவுவதை தடுக்க என்ன செய்யலாம்?:
HMPV மற்றும் பிற சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைக்க CDC பின்வரும் வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறது: குறைந்தது 20 வினாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். கழுவப்படாத கைகளால் உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும் . நெரிசலான இடங்களில் மாஸ்க் அணியவும். நோய்வாய்ப்பட்டால் வீட்டிலேயே இருங்கள், இதனால் வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம். அடிக்கடி தொடும் மேற்பரப்புகளை தவறாமல் சுத்தம் செய்யுங்கள்
HMPV வைரஸ் என்றால் என்ன?:
HMPV 2001 இல் கண்டுபிடிக்கப்பட்டது. HMPV ஆனது நியூமோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது. அந்த குடும்பத்து வைரசுகள் பொதுவாக சுவாசம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும். பொதுவான சளி அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்டு இருக்கும். மூச்சு விடுவதில் அதிக சிரமத்தை ஏற்படுத்தும்.
இது அனைத்து வயதினரையும் பாதிக்கும். சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே இணை நோய் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று CDC தெரிவித்துள்ளது. சிடிசி அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய அமைப்பு ஆகும். அரசின் இந்த அமைப்பு இந்தியாவின் சுகாதாரத்துறை போன்றது ஆகும். கொரோனா காலத்தில் என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முக்கிய அறிவுரைகளை இந்த அமைப்பே வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications