தீண்டாமையை பார்ப்பீங்களா? குடியுரிமை ஃபார்மிலேயே கேளுங்க.. ஆஸ்திரேலியாவுக்கு தமிழக குழு ‛டிமாண்ட்'
கான்பெர்ரா: ‛‛நீங்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கிறீர்களா?'' என்ற கேள்வியை குடியுரிமைக்கான ஆவணத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் சென்ட்டர் டேவிட் ஷூபிரிட்ஜியிடம் தமிழ்நாடு பிரதிநிதிகள் குழு கோரிக்கையாக வைத்தது.
தமிழ்நாடு பிரதிநிதிகள் குழு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தனர். திமுக எம்பி ஆ ராசா உள்பட பலர் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் தமிழ்நாடு பிரதிநிதிகள் குழுவினர் அந்த நாட்டின் சென்ட்டர் டேவிட் ஷூபிரிட்ஜியை சந்தித்து பேசினர். இந்த வேளையில் தமிழ்நாடு பிரதிநிதிகள் குழுவினர் முக்கிய கோரிக்கையை வைத்தனர்.
தீண்டாமையை பின்பற்றும் நபர்களுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி கூடாது என்று கூறினர். இதுதொடர்பாக தமிழ்நாடு பிரதிநிதிகள் குழுவினர், ஆஸ்திரேலியாவின் செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜியிடம், ‛‛உங்களின் ஒரு முக்கிய விஷயத்தை கோரிக்கையாக வைக்கிறோம். ஆஸ்திரேலியாவுக்கான குடியுரிமை விண்ணப்பத்தில் (Immigration Form) இந்த நாடுகளுக்கு பயணம் செய்துள்ளீர்களா? ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா? என்ற கேள்விகளை கேட்டுள்ளீர்கள்.
அதில் இன்னொரு கேள்வியையும் சேர்க்க வேண்டும். அதன்படி நீங்கள் தீண்டாமையை கடைப்பிடிக்கிறீர்களா? என்ற கேள்வியை கேட்க வேண்டும். ஒருவேளை தீண்டாமையை கடைப்பிடிக்கும் நபர்கள் என்றால் ஆஸ்திரேலியாவுக்கும் அனுமதிக்க கூடாது. அவர்கள் தடை செய்யப்படுவார்கள் என்பதை கேள்வியாக கேட்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications