மூச்சு விட முடியலை போலீஸ்கார்.. அதான் கத்தியை எடுத்து.. பரபரக்க வைத்த ரஷ்யாக்காரர்!
Recommended Video

ரஷ்யா: இது ஒரு வினோதமான - பயங்கரமான கேஸ்!!
ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் போலீசார் மூச்சிறைக்க விரைந்து வந்து கேட்டனர், "என்னப்பா ஆச்சு?" என்று. அதற்கு அந்த நபர், "ஒன்னுமில்லை சார்.. மூச்சுவிட எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. எவ்வளவோ ட்ரை பண்ணி பார்த்தேன்.. முடியல!! கஷ்டப்பட்டு தாக்குப்பிடிச்சு, அட்ஜஸ்ட் பண்ணிடலாம்னு பார்த்தேன். அப்பவும் மூச்சுவிடாம என்னால இருக்க முடியல.
[அப்படி என்ன கேட்டு விட்டார் விஜயகுமார்.. இதற்கு போய் சஸ்பெண்ட் செய்வதா?!]

ஒரு ஐடியா தோணுச்சு
என்ன செய்றதுன்னே தெரியல, அதனால ஒரு ஐடியா வந்தது. கத்தியை எடுத்து நடு தலையில வெச்சு ஒரே குத்தாக குத்தி ஓட்டை போட்டேன். அப்பவாவது காத்து உள்ளே போய் மூச்சு விட முடியுமா என்று பார்த்தேன்.. ஆனாலும் மூச்சு விட முடியவில்லையே".. என்று கூலாக சொல்லிக் கொண்டே போனார் அந்த நபர்.

நடு மண்டையில் கத்தி
அவர் பேசுவதை கேட்க கேட்க அப்படியே உறைந்து போய் நின்றனர் போலீசார். காரணம், ரஷ்யாவின் டுனெட்ஸ்க் பகுதியில் யூரி ஜோகோவ் என்ற நபர் தலையில் கத்தி குத்தப்பட்டு நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதனால்தான் அப்படி மூச்சிறைக்க இவரை தேடி வந்தனர். காதில் கேட்டது உண்மைதான் என்பதுபோல அந்த நபரும் தன் பிரச்சனையை சொல்லிக் கொண்டே இருந்தார். இருந்தாலும் போலீசாருக்கு இதை நம்பவே முடியவில்லை. எதற்கும் இன்னும் அருகில் சென்று அந்த நபரின் தலையில் பார்த்தனர்.

ஷாக் ஆன நர்ஸ்கள்
உண்மைதான்! தலையில் கத்தி அப்படியே ஓட்டை இடத்தில் குத்தி செங்குத்தாக நின்று கொண்டிருந்தது. கத்தியை பார்த்தபிறகு போலீசாருக்கு இன்னும் ஷாக்! வேற வழியில்லையே.. அப்படியே அவரை விட்டு போக முடியாதே. அதனால் அவரை உடனடியாக அங்கிருந்த ஒரு ஹாஸ்பிடலுக்கு கூட்டி சென்றார்கள். அங்கு நம்ம ஆள் கத்தி தலையுடன் உள்ளே நுழைவதை பார்த்ததும் போலீசார்களுக்கு ஏற்பட்ட அதே ஷாக்தான் அங்கிருந்தும் வந்தது.

டாக்டர்கள் விரைவு
உடனடியாக ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க முடிவானது. ஆனால் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அந்த ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் செய்து கத்தியை வெளியே எடுக்கும் அளவுக்கு டாக்டர்கள் யாரும் டேலண்ட் கிடையாதாம். அதனால் பெரிய நகரம் ஒன்றிலிருந்து ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.

மூச்சே விடலையே
பிறகு டாக்டர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த கத்தியை பத்திரமாக வெளியே எடுத்தார்கள். ஆனால் கண்டிப்பாக அவருக்கு கத்தி குத்தின இடத்தில் செப்டிக் ஆகுமாம். அதனால் அங்கேயே தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடைசி வரைக்கும் அவர் மூச்சு விட்டாரா இல்லையா? என்பது குறித்து டாக்டர்கள் மூச்சு விடவே இல்லைங்க!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications