யோகா தினம் ஓகே.. மோடி யோகாசனம் செய்கிறாரா?, ரஷ்ய அதிபர் புடின் கேள்வி
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: இந்திய பிரதமர் மோடி யோகாசம் செய்பவரா என்ற கேள்வியை ரஷ்ய அதிபர் விலாடிமிர் புட்டின் கேட்டுள்ளார்.

தலைநகர் மாஸ்கோவில் சில தேர்ந்தெடுத்த பத்திரிகையாளர்களுடன் புட்டின் நேற்று சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது அவரிடம் யோகா விழிப்புணர்வை மோடி பரப்பிவருவது குறித்து கேட்கப்பட்டது. புதின் கூறுகையில், அதெல்லாம் சரிதான். ஆனால் மோடியே யோகா செய்கிறாரா என்பது தெரியவில்லையே. அவர் எனது நண்பர்தான். ஆனாலும் அவர் யோகா பயிற்சி செய்வாரா என்பது தெரியவில்லை என்றார்.
மோடியும், புடினும், மிகவும் பிடிவாதக்காரர்களாக பார்க்கப்படுகிறார்களே என்ற நிருபர்களின் கேள்விக்கு, "நான் ஒன்றும் பிடிவாதக்காரன் இல்லை. விட்டுக்கொடுக்க தயாராகவே உள்ளேன். பெரும்பாலும் எதிர்தரப்புதான் பிடிவாதமாக இருந்துவிடுகிறது" என்றார் புடின்.












Click it and Unblock the Notifications