இது லிஸ்ட்லயே இல்லையே.. சவுதி இளவரசரின் பேச்சைக் கேட்ட டிரம்ப்! சிரியா மீதான பொருளாதார தடைகள் நீக்கம்
ரியாத்: சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானின் கோரிக்கையை ஏற்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை நீக்க உத்தரவிட்டுள்ளார். சிரியாவில் பஷர் அல்-அசாத் ஆட்சியின் போது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்த நிலையில், அவர் நாட்டை விட்டு ஓடிய போதும் தடைகள் தொடர்ந்த நிலையில், தற்போது விலக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சிரியாவில் கடந்த டிசம்பர் மாதம் திடீரென உள்நாட்டு போர் வெடித்த நிலையில், ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில், அதிபராக இருந்த ஆசாத் அங்கிருந்து வெளியேறி ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார். ஹெடிஎஸ் அமைப்பினர் அங்கு ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அகமது அல்-ஷரா இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.
முன்னதாக அங்கு 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்த நிலையில், அமெரிக்கா அந்நாட்டின் மீது கடுமையான பொருளாராத தடைகளை விதித்தது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பின்னர் பொருளாதார தடைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை நீக்க உத்தரவிட்டுள்ளார். சிரியா மீதான தடைகளை நீக்க சவூதி அரேபியாவின் இளவரசர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிரியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவூதியின் ரியாதில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், சிரியா மீதான பொருளாதார தடைகளை நீக்க உத்தரவிடுகிறேன். சிரியா பின்னடைவை சந்திக்க அவை ஒரு முக்கிய பங்காற்றின. ஆனால் இப்போது சிரியா முன்னேற வேண்டும் என்பதால் அந்த தடைகளை நீக்க உத்தரவிடுகிறேன். சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல்-ஷராவின் நிர்வாகத்திற்கு இது பெரிய உதவியாக இருக்கும். தற்போது சிரியாவிற்கு முன்னேறும் நேரம் வந்துவிட்டது என்றார்.
சிரியா மீதான தடைகளை நீக்க பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், அந்த நாடுகள் தற்போது இதனை வரவேற்றுள்ளன. டிரம்பின் அறிவிப்பை சிரியாவில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் வரவேற்று டொனால்ட் டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளது. தற்போது சிரியா அதிபராக இருக்கும் அகமது அல்-ஷரா, சிரியா போரின் போது அல்காயிதா பிரிவின் தலைவராக இருந்தவர்.
2016ஆம் ஆண்டு அந்த அமைப்புடன் தொடர்பை துண்டித்த நிலையில், தற்போது சிரியா இடைக்கால அரசின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். சிரியா மீதான தடைகள் நீக்கப்பட்டதன் மூலம் அந்த நாட்டின் நிலை விரைவில் முன்னேற்றம் காணும் என்றும், சிரியா மீண்டும் அமைதியும், வளர்ச்சியும் அடைந்த நாடாக மாறும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications