கடைசியை தடையையும் தாண்டினார்.. அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வானார் டொனால்ட் ட்ரம்ப்!
வாஷிங்டன்: கடந்த மாதம் 8ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டனர்.
இதில் குடியரசு கட்சி, 276 இடங்களில் வெற்றி பெற்றது. ஜன நாயகக் கட்சி 218 இடங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து, 'எலக்ட்ரோல் காலேஜ்' என்னும் தேர்தல் சபை உறுப்பினர்கள் இணைந்து, அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரை முறைப்படி தேர்வு செய்வார்கள். அதன்படி இன்று நடந்த வாக்கெடுப்பில் அதிபர் பதவிக்கு தேவையான 270 வாக்குகளைப் பெற்றுவிட்டார் டொனால்ட் ட்ரம்ப்.

இதையடுத்து 45-வது அமெரிக்க அதிபராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6ம் தேதி அமெரிக்க காங்கிரசின் இரு அவை கூட்டத்தில் இது முறைப்படி அறிவிக்கப்படும். 20ம் தேதி அமெரிக்க அதிபரும், துணை அதிபரும் பதவியேற்பார்கள்.
சில நேரங்களில் எலக்ட்ரோல் காலேஜ் வாக்குகள் மாறிப்போய் எதிரணி வேட்பாளரை தேர்ந்தெடுத்த சரித்திரமும் உண்டு என்பதால் பரபரப்பு நிலவியது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப்தான் இதில் வெற்றி பெற்றார்.
-
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications