இந்தியாவை வைத்து கல்லா கட்டும் அமெரிக்கா.. டிரம்ப் முகத்தில் கரி பூசிய டேட்டா! நோட் பண்ணுங்க மக்களே

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறையை சுட்டிக்காட்டி வரியை டிரம்ப் தீட்டி உள்ளார். ஆனால் உண்மையில் அமெரிக்கா தான் இந்தியாவை வைத்து அதிகம் சம்பாதித்து வருவதாக முக்கிய டேட்டா வெளியாகி உள்ளது. அதாவது வர்த்தகத்துக்கு அப்பாற்பட்டு மாற்று வழியில் இந்தியாவை வைத்து அமெரிக்கா ரூ.3.53 லட்சம் கோடி வரை கல்லா கட்டுவதாக கூறி டிரம்பின் முகத்தில் ஜிடிஆர்ஐ டேட்டா கரியை பூசி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளா். இந்த வரி விதிப்புக்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று இந்தியா - அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தக பற்றாக்குறையும், ரஷ்யாவிடம் இருந்து நாம் வாங்கும் கச்சா எண்ணெயும் தான் காரணம் என்று டிரம்ப் கூறினார்.

donald-trump-tariffs-row-how-us-profits-big-from-india-says-gtri-data

இதனை நம் நாடு கடுமையாக எதிர்த்துள்ளது. அமெரிக்காவின் வரி நியாயமற்றது. தேச நலனை கருத்தில் கொண்டு இந்தியா செயல்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்கா கைவிட்டுள்ளதால் நம் நாடு, சீனாவுடன் சேர்ந்து செயல்பட தொடங்கி உள்ளது. இது டிரம்பின் கோபத்தை அதிகப்படுத்தி உள்ளது.

டிரம்பின் விமர்சனம்

ஏற்கனவே ரஷ்யாவுடன் காட்டும் நெருக்கத்தால் இந்தியாவின் பொருளாதாரம் செத்துப்போய் விட்டதாக டிரம்ப் விமர்சனம் செய்தார். தற்போது சீனாவுடன் நெருக்கம் காட்டி வருவதால் இந்தியா எங்களுக்கு வரியை போட்டு கொல்கிறது என்று டிரம்ப் விமர்சித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் தனது வலைதளம் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அமெரிக்காவை இந்தியா வர்த்தகத்துக்காக பயன்படுத்துகிறது. ஆனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய மறுக்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு இந்தியாவுடன் அதிக வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிகப்படியான வரிகளை விதிக்கிறது என்று குற்றம்சாட்டி வருகிறார்.

வர்த்தக பற்றாக்குறை எவ்வளவு?

கடந்த 2014ம் ஆண்டு அமெரிக்காவுக்கு நம் நாட்டில் இருந்து மொத்தம் 7.70 கோடி லட்சம் கோடிக்கு (87.3 பில்லியன் டாலர்) ஏற்றுமதி செய்யப்பட்டது. அதேவேளையில் அமெரிக்காவில் இருந்து நாம் 3.65 லட்சம் கோடி(41.5 பில்லியன் டாலர்) மதிப்பிலான பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்தோம்.

இதனால் நம் நாட்டுடன் அமெரிக்காவுக்கு 4.34 லட்சம் கோடிக்கு வர்த்தக பற்றாக்குறை உள்ளது. இதனை சுட்டிக்காட்டி தான் டிரம்ப் நம் நாட்டுக்கு வரி போட்டுள்ளார். அதோடு நம் நாட்டின் பொருளாதாரத்தை தரக்குறைவாக பேசி வருகிறார் டிரம்ப்.

வெளியான புதிய டேட்டா

ஆனால் டிரம்பின் இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் உண்மை இல்லை என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் வர்த்தக பற்றாக்குறை நிலவினாலும் கூட இந்தியாவை வைத்து அமெரிக்கா லாபமடைவதாக டேட்டா வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக GLOBAL TRADE RESEARCH INITIATIVE அல்லது GTRI டேட்டாவில் கூறியுள்ளதாவது:

இந்தியாவுடன், அமெரிக்காவுக்கு வர்த்தக பற்றாக்குறை உள்ளது உண்மை தான். ஆனால் வர்த்தகம் மட்டுமின்றி பிற அனைத்து வருவாயையும் பார்க்கும்போது அமெரிக்காவிற்கு 35 பில்லியன் டாலர் முதல் 40 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.8 லட்சம் கோடி முதல் 3.52 லட்சம் கோடி வரை) வரை உபரி வருவாய் கிடைக்கிறது.

35- 40 பில்லியன் டாலர் வருவாய்

அமெரிக்கா இந்தியாவுடன் 45 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. ஆனால் ஒட்டுமொத்த வணிகம் அடிப்படையில் பார்த்தால் அமெரிக்கா இந்தியாவுடன் 35- 40 பில்லியன் டாலர் வரை வருவாய் உபரியை கொண்டுள்ளது. இந்த கணிசமான வருமானம் பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருகிறது:.

கூகுள், மெட்டா, அமேசான், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து அதிக வருமானத்தை பெறுகின்றன. இந்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து 15-20 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது.

அதேபோல் மெக்டொனால்ட்ஸ், கோக கோலா மற்றும் பல அமெரிக்க நிறுவனங்கள் 15 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை சம்பாதிக்கின்றன. அதேபோல் வெளிநாடுகளில் தொழில் தொடங்குவது தொடர்பான வால் ஸ்ட்ரீட் நிதி நிறுவனங்கள் மற்றும் பிற ஆலோசனை நிறுவனங்களில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் ஆலோசனை, உதவிகள் கோருகின்றன. இதன்மூலம் அமெரிக்கா 10-15 பில்லியன் டாலர்களை கட்டணமாக பெறுகிறது. வால்மார்ட், ஐபிஎம், டெல் மற்றும் உள்ளிட்ட நிறுவனங்கள் 15 முதல் 20 பில்லியன் டாலர்களை பெறுகின்றன.

இந்திய மாணவர்கள் வழியாக..

அதுமட்டுமின்றி மருந்து காப்புரிமைகள், ஹாலிவுட் படங்கள், ஸ்ட்ரீமிங் சேவைகள் உள்ளிட்டவற்றின் மூலமாகவும் அமெரிக்காவுக்கு வருமானம் கிடைக்கிறது. அதேபோல் அமெரிக்க பல்கலை கழகங்களில் படிக்கும் இந்திய மாணவர்களின் கல்வி கட்டணம் மற்றும் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் வாங்கும் கடன் உள்பட பல விஷயங்களில் அந்த நாட்டின் பொருளாதாரங்களுக்கு உதவி செய்கின்றனர். அதன்படி இந்திய மாணவர்கள் 25 பில்லியன் டாலர் வரை பங்களிப்பு செய்கின்றனர்'' என கூறப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூறுவது பொய். இந்தியா உடனான வர்த்தக உறவில் அமெரிக்காவும் அதிகமாக பயனடைந்து வருகிறது என்பதை இந்த டேட்டா வெளிப்படுத்தி உள்ளது. இதன்மூலம் இந்தியாவால் நஷ்டம் நஷ்டம் என பஞ்சப்பாட்டு பாடி வரும் டிரம்பின் முகத்தில் இந்த டேட்டா கரியை பூசி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+