Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல ஆயிரம் கோடி போச்சே.. சமயம் பார்த்து அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சீனா.. கைக்கொடுத்த பிரேசில்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: டொனால்ட் டிரம்ப்பின் அடாவடி வரி விதிப்புக்கு சீனா கடும் பதிலடியை கொடுத்துள்ளது. இதனால் அமெரிக்க விவசாயிகள் கதற தொடங்கி உள்ளதோடு, டிரம்புக்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் சீனாவுக்கு, ‛பிரிக்ஸ்' அமைப்பின் உறுப்பினராக இருக்கும் பிரேசில் கைக்கொடுத்துள்ளது. இது அமெரிக்காவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்த உள்ளது.

அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் டிரம்ப் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வரியை விதித்துள்ளார். நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். அதேபோல் அண்டை நாடான சீனாவுக்கு 145 சதவீத வரியை விதித்தார். இதில் 30 சதவீத வரி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மற்ற வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வரிகளும் எப்போது வேண்டுமானாலும் சீனா மீது டிரம்ப் செயல்படுத்தலாம்.

donald trump us china brazil

மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு இந்தியா - சீனா உதவி வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். ரஷ்யாவிடம் இருந்து நம் நாடும், சீனாவும் அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இதன்மூலம் உக்ரைன் போருக்கு பொருளாதார ரீதியாக இருநாடுகளும் உதவுதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்கா போல் ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் சீனா, இந்தியாவுக்கு வரி விதிக்க டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

டிரம்ப் எப்போதுமே சீனாவை தனது பரம எதிரியாக பார்க்கிறார். இதனை சீனாவும் உணர்ந்து கொண்டுள்ளது. இதனால் தான் சீனாவும் போட்டி போட்டு அமெரிக்காவுக்கு 135 சதவீத வரியை விதித்து அதனை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவை சீனா குறைத்துள்ளது. அந்த வகையில் முக்கியமான ஒரு பொருள் சோயா பீன்ஸ். உலகிலேயே சோயா பீன்ஸ் உற்பத்தியில் முக்கிய நாடுகளாக அமெரிக்காவும், பிரேசிலும் விளங்குகின்றன. இன்னொரு பக்கம் அதிகளவில் சோயா பீன்சை இறக்குமதி செய்யும் நாடு என்றால் சீனா தான்.

சீனா எப்போதுமே அமெரிக்காவிடம் இருந்து தான் சோயா பீன்ஸ் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறது. சீனாவின் சோயாபீன் இறக்குமதியில் 90 சதவீதம் அமெரிக்க விவசாயிகளின் உற்பத்தியாக இருக்கும். தற்போது அமெரிக்காவிடம் இருந்து சோயாபீன்ஸ் இறக்குமதியை சீனா படிப்படியாக குறைத்து வருகிறது. அமெரிக்காவுக்கு பதில் ‛பிரிக்ஸ்' அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசிலிடம் சீனா சோயாபீன்ஸ் வாங்கி வருகிறது.

மேலும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை சீனா பிரேசிலிடம் இருந்து மொத்தம் 42.26 மில்லியன் டன் சோயாபீன்ஸை இறக்குமதி செய்துள்ளது. மாறாக அமெரிக்காவிடம் இருந்து 16.57 மில்லியன் டன் சோயாபீன்ஸை மட்டுமே சீனா வாங்கி உள்ளது. அதாவது சீனாவின் தேவையில் வெறும் 25 சதவீதம் மட்டும் தான் அமெரிக்காவில் இருந்து இறங்கியது. 70 சதவீதம் சோயா பீன்ஸ் பிரேசிலில் இருந்து தான் வந்திருக்கிறது. பிரேசிலை ஒப்பிடும்போது அமெரிக்காவில் முன்கூட்டியே சோயாபீன்ஸ் உற்பத்தி செய்யப்படும்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை அமெரிக்காவிடம் இருந்து சீனாவுக்கு சோயாபீன்ஸ் ஏற்றுமதி செய்யப்படும். தற்போதைய காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் சீனா அமெரிக்காவிடம் இருந்து 12 மில்லியன் டன் முதல் 13 மில்லியன் டன் வரையிலான சோயாபீன்ஸ் இறக்குமதி செய்ய முன்பதிவு செய்தது. ஆனால் இப்போது அமெரிக்காவிடம் சோயாபீன்ஸ் இறக்குமதி செய்ய சீனாவில் இருந்து எந்த முன்பதிவும் செய்யப்படவில்லை. இது அமெரிக்க விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கடந்த 2024ம் ஆண்டில் அமெரிக்கா மொத்தம் 52.21 மில்லியன் மெட்ரிக் டன் சோயாபீன்ஸை ஏற்றுமதி செய்தது. இதன்மூலம் ரூ.24.47 பில்லியன் டாலரை சம்பாதித்தது. இந்திய மதிப்பில் ரூ.2.04 லட்சம் கோடியாகும். இதில் சீனாவிடம் இருந்து மட்டும் அமெரிக்காவுக்கு 12.64 பில்லியன் டாலர் வரை கிடைத்தது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.05,200 லட்சம் கோடியாகும். இப்போது சீனா, அமெரிக்காவின் சோயாபீன்ஸ் ஏற்றுமதியை குறைத்துள்ளது. இதனால் சீனாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய பல லட்சம் கோடி பிரேசில் உள்பட பிற நாடுகளை நோக்கி செல்ல உள்ளது.

சீனாவின் இந்த திடீர் முடிவால் அமெரிக்காவின் சோயாபீன்ஸ் விவசாயிகள் மாற்று மார்க்கெட்டை தேட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டிரம்பின் அடாவடியால் சீனாவும், பிரேசிலும் சேர்ந்து அமெரிக்க விவசாயிகளை கதறவிட்டுள்ளது. இதுதொடர்பாக டிரம்புக்கு மனு அளித்துள்ளனர். இது டிரம்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் சீனா வரக்கூடிய மாதங்களில் அமெரிக்காவிடம் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு சோயாபீன்ஸ் வாங்கலாம். இருப்பினும் கடந்த ஆண்டை விட அது குறைவான அளவில் இருக்கும் என்பதால் அமெரிக்காவுக்கு சோயாபீன்ஸ் வியாபாரத்தில் சீனாவிடம் இருந்து கிடைக்க வேண்டும் பல ஆயிரம் கோடி கிடைக்காமல் போகலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+