Doomsday எச்சரிக்கை! 2026ல் பூமிக்கு அழிவு நிச்சயம்? பாபா வங்காவின் பகீர் கணிப்பு! என்னதான் நடக்கும்
சியாட்டில்: 2026ல் உலகம் அழியும் என்ற கணிப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இவை ஒட்டுமொத்த இணையத்தையும் ஆக்கிரமித்து இருக்கும் சூழலில், உண்மையில் உலகம் அழியுமா.. அதற்கு வாய்ப்பு எதாவது இருக்கிறதா.. ஏன் இதுபோன்ற தகவல்கள் இப்போது இணையத்தில் பரவுகின்றன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
2026 'உலக அழிவு' குறித்த கணிப்புகளுடன் ஆரம்பித்துள்ளது. ஒரு பக்கம் மீம்கள், இன்னொரு பக்கம் பாபா வங்கா போன்ற தீர்க்கதரிசிகளின் கருத்துகள் என இணைய உலகமே மிரளும் அளவுக்குக் கணிப்புகள் உள்ளன. 2026ல் உலகம் முடிவுக்கு வரும் என்று பல அச்சுறுத்தல்கள் கிளம்பியுள்ளன.

கணிப்புகள்
சிலர் மூன்றாம் உலகப் போர் ஆரம்பிக்கும் எனச் சொல்ல.. மற்றொரு தரப்பினர் மாபெரும் இயற்கைச் சீற்றங்கள் அல்லது வேற்று கிரகவாசிகள் பூமிக்குள் நுழைவார்கள் என்று எச்சரிக்கின்றனர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எச்சரிக்கை விடுக்க 2026 ஆரம்பித்துள்ளது. அதேநேரம் இதுபோல உலகம் அழிவது குறித்த பேச்சுகள் எழுவது இது முதல்முறை இல்லை.. இது கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை.
மேலும், இவை எந்தவொரு ஒரு நம்பகமான ஆய்வில் இருந்தும் வருவதில்லை. மாறாக, தீர்க்கதரிசனங்களின் எச்சரிக்கை, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட பழைய அறிவியல் ஆய்வுகள் மற்றும் நடப்பு புவிசார் அரசியல் நெருக்கடிகள் குறித்த பதற்றம் ஆகியவற்றின் வெளிப்பாடாகவே இவை வருகிறது.. அதேநேரம் 2026 அமைதியான ஒரு ஆண்டாக அமைந்துவிடும் என்றும் சொல்வதற்கு இல்லை. இப்போது ரஷ்யா-உக்ரைன், மத்தியக் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல் என எல்லாப் பக்கமும் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும், 'தி எகனாமிஸ்ட்' பத்திரிகையின் 2026 அட்டைப்படம்கூட போர், அமைதியின்மை, குழப்பம் நிறைந்த ஆண்டையே குறிக்கிறது.
பாபா வங்கா
உலகின் மிக முக்கியமான தீர்க்கதரிசியாக அறியப்படும் பாபா வங்கா 2026 குறித்து முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளார். ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளிடையே மோதல்கள் அதிகரித்து, மூன்றாம் உலகப் போர் தொடங்கும் அபாயம் உள்ளது. மேலும், பூமியின் 7-8% நிலப்பரப்பைப் பாதிக்கும் பேரழிவு தரும் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், தீவிர வானிலை, வெள்ளம் மற்றும் சூறாவளிகள் போன்ற பாரிய இயற்கைச் சீற்றங்களும் ஏற்படும் என அவர் கணித்துள்ளார்
மேலும், வேற்று கிரகவாசிகள் உடனான முதல் தொடர்பு, நவம்பரில் பெரிய விண்கலம் பூமிக்குள் நுழைதல், செயற்கை நுண்ணறிவின் அதிகரிக்கும் ஆதிக்கம், பொருளாதார நிலையற்ற தன்மை மற்றும் ஆசியா அல்லது சீனாவை நோக்கி மாறும் உலக வல்லரசுகளின் நிலை எனப் பாபா வங்காவின் கணிப்புகள் பெரிய மாற்றத்தையே குறிக்கிறது. பாபா வங்கா மட்டுமல்ல, நாஸ்ட்ராடாமஸ் (Nostradamus) கூட 2026 மோசமான ஆண்டாகவே இருக்கும் எனக் கணித்துள்ளார். ரத்த ஆறுகள், கொள்ளைநோய்கள், கொடுங்கோல் ஆட்சியாளர்களைப் பற்றி எச்சரிக்கின்றன.
2026ல் உலகம் அழியுமா?
அப்படி என்றால் 2026ல் எல்லாம் முடிந்துவிடுமா என்ற கேள்வி பலருக்கும் வரும். இல்லை என்பதே அதற்கான பதிலாக இருக்கும். வரலாற்று ரீதியாகப் பார்த்தால் கடந்த காலங்களில் உலக அழிவு குறித்த கணிப்புகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
அதில் முக்கியமானது 21ஆம் நூற்றாண்டு தொடர்பானது. 2000க்குள் நாம் நுழையும்போது, கம்ப்யூட்டர்களில் டேட்டா பிழைகள் ஏற்படும். இதனால் வங்கி, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு போன்ற முக்கிய அமைப்புகள் செயலிழக்கும் என அஞ்சப்பட்டது. நிதிச் சீர்குலைவு, மின் தடையின்மை, விமானங்கள் வானத்தில் இருந்து விழும் ஆபத்துகள் என ஏகப்பட்ட கணிப்புகள் வந்தன. ஆனால், அதுபோல எதுவும் நடக்கவில்லை.
2012ல் கூட சொன்னார்களே
அதேபோல பண்டைய மாயன் நீண்ட காலண்டர் அதன் 13வது சுழற்சியை நிறைவு செய்ததால், 2012 டிசம்பர் 21 அன்று உலகம் முடிவுக்கு வரும் என்று கணிப்புகள் வெளியாகின. இது தொடர்பாக ஹாலிவுட் படம் கூட வந்து ஹிட் அடித்தது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. உண்மையில் ஸ்பெனிஷ் படையெடுப்பை எதிர்கொண்டதால் மாயன்கள் அதற்கு மேல் சுழற்சிகளைச் சேர்க்க முடியவில்லை. ஆனால், அதை உலக அழிவு தேதி என மனிதர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர்.
என்ன நடக்கும்!
ஏஐ வளர்ச்சி, புவிசார் பதற்றம், வானிலை நிகழ்வுகள் சிக்கலாக மாறினாலும் ஒவ்வொரு முறையும், மனிதக்குலம் தங்களைத் தகவமைத்துக் கொண்டது, புதுமைகளைப் புகுத்தியது தன்னை நிலைத்து நிறுத்தி கொண்டுள்ளது. எனவே, இந்த முறையும் அப்படியே இருக்கும் எனத் தெரிகிறது. 2026 குழப்பங்கள் மற்றும் போர் நிறைந்த ஆண்டாக இருந்தாலும், அது மனிதக்குலத்தின் கடைசி ஆண்டாக இருக்காது என்பதில் சந்தேகம் வேண்டாம்!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications