Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேரிலாண்ட் மாகாண போக்குவரத்து ஆணையராக பதவி ஏற்றார் டாக்டர் ராஜன்!

Subscribe to Oneindia Tamil

பால்டிமோர்(யு.எஸ்): மேரிலாண்ட் மாகாண துணைச் செயலாளராக பதவி வகித்து வந்த டாக்டர் ராஜன் நடராஜன் தற்போது போக்குவரத்து துறை ஆணையராக பதவி ஏற்றுள்ளார்.

கவர்னர் மார்ட்டின் ஓ மலேயின் ஆட்சியில் வெளியுறவு மற்றும் தொழில் துறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி பல முன்னோடி திட்டங்களை டாக்டர் ராஜன் செயல்படுத்தி வந்தார். அரசு - தனியார் துறைகளை இணைத்து செயல்படுத்துவதில் டாக்டர் ராஜன் வல்லவராக இருந்து வருகிறார். மேரிலாண்டில் Information Technology க்கு தனியாக துறை உருவாக்கியதில் டாக்டர் ராஜனின் பங்கு முக்கியமானதாகும்.

Dr Rajan is the new Transportation Commissioner of Maryland

மேலும் சாதனை தொடர வாய்ப்பு

கவர்னர் ஓ மலே வின் வரலாற்று சிறப்புமிக்க இந்திய பயணத்திற்கும், பல்வேறு மாநிலங்களுடன் வர்த்தக, நல்லுறவு ஒப்பந்தங்கள் நிறைவேறவும் டாக்டர் ராஜன் முன்னின்று ஏற்பாடுகள் செய்து நடத்தி வைத்தார். சீனா , ஐக்கிய அரபு நாடுகள், தென் கொரியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, சிங்கப்பூர், நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் மேரிலாண்ட்-க்கும் இடையே உறவு மேம்படவும், பல தொழில் ஒப்பந்தங்கள் நிறைவேற்றியதும் டாக்டர் ராஜனின் முக்கிய சாதனைகளாகும்.

டாக்டர் ராஜனின் பொதுச் சேவை, நிர்வாகத் திறன் மற்றும் சாதனைகளை வெகுவாக பாராட்டிய கவர்னர் ஓ மலே, மேலும் மூன்றாண்டுகளுக்கு மேரிலாண்ட் போக்குவரத்துத் துறை ஆணையராக பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதி முக்கியமான நிதி நிர்வாகம்

மற்ற அனைத்துத் துறைகளைக் காட்டிலும் அதிக பட்ஜெட் ஒதுக்கீடு கொண்ட போக்குவரத்து துறை, மேரிலாண்ட் மாகாணத்தின் மிகப் பெரிய துறையாகும்.

போக்குவரத்து திட்டம் மற்றும் கொள்கைகளை ஆராய்ந்து போக்குவரத்துச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு, துறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கி வழி நடத்திச்செலவது ஆணையரின் முக்கிய பணியாகும். ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து துறையின் வெவ்வேறு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடுக்கான வரைவுத் திட்டங்களும் ஆணையரின் ஆய்வுக்குட்பட்டது.

Dr Rajan is the new Transportation Commissioner of Maryland

ஆறு நிர்வாக அமைப்புகள்

போக்குவரத்து துறைக்குக் கீழ் மேரிலாண்ட் போக்குவரத்து ஆணையம், மேரிலாண்ட் ட்ரான்சிட் அட்மினிஸ்ட்ரேஷன், மேரிலாண்ட் துறைமுகத் துறை, மாகாண நெடுஞ்சாலைத் துறை, மேரிலாண்ட் விமானத்துறை மற்றும் மேரிலாண்ட் மோட்டார் வாகனத்துறை ஆகிய ஆறு நிர்வாக அமைப்புகளும் செயல்படுகின்றன.

வரலாற்று சிறப்பு மிக்க பதவியேற்பு

முன்னதாக மேரிலாண்டில் துணைச்செயலாளராக பதவியேற்ற முதல் இந்தியர், தமிழர் டாக்டர் ராஜன் ஆவார். தற்போது துறை ஆணையராக பதவியேற்ற முதல் இந்தியர், தமிழரும் டாக்டர் ராஜன்தான். மிக முக்கிய துறைகளில் கவர்னரால் பணி அமர்த்தப்பட்டதன் மூலம் டாக்டர் ராஜன் அமெரிக்க இந்தியர்களுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளார் என்றால் மிகையில்லை.

டிசம்பர் 29ம் தேதி மாண்ட்கோமெரி கவுண்டி சர்க்யூட் கோர்ட் வளாகத்தில் போக்குவரத்து ஆணையராக பதவியேற்ற டாக்டர் ராஜனை பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்தினர்.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் முத்துக்காடு என்ற சிற்றூரில் பிறந்த டாக்டர் ராஜன், புதுக்கோட்டை ராஜா கல்லூரியில் பிஎஸ்சி யும் பூண்டி புஷ்பம் கல்லூரியில் எம்.எஸ்சியும், பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

புதிய பணியில் டாக்டர் ராஜன் சிறக்க ஒன் இந்தியா சார்பிலும் வாழ்த்துகிறோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+