தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும்: அமெரிக்கவாழ் இந்தியர்கள் கோரிக்கை
வாஷிங்டன்: இந்தியப் பெண் துணைத் தூதர் தேவ்யானி மீது தொடரப் பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என அமெரிக்க வாழ் இந்தியர்கள் அதிபர் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதராக பணியாற்றிய தேவ்யானியை விசா மோசடி குற்றத்திற்காக பொது இடத்தில் வைத்து கைது செய்தது அமெரிக்கா. மேலும், அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியும், கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து வைத்தும் அவமரியாதை செய்தனர் அமெரிக்கப் போலீசார்.

இந்தியத் துணைத் தூதர் இவ்வாறு நடத்தப் பட்டது இந்தியாவையே அவமானப் படுத்தும் செயல் என இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. மேலு, இச்செயலுக்காக அமெரிக்கா தனது மன்னிப்பைக் கோர வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தது.
ஆனால், தொடர்ந்து தனது செயலுக்கு அமெரிக்கா நியாயம் கற்பித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கிடையே கருத்து மோதல் உருவாகியுள்ளது. இந்நிலையில், தேவயானி மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று வெள்ளை மாளிகைக்கு இணையதளம் வழியாக கோரிக்கை விடுத்துள்ளனர் அமெரிக்கவாழ் இந்தியர்கள்.
தேவயானியை கைது விவகாரம் அமெரிக்கவாழ் இந்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதாகவும், அமெரிக்காவின் நடவடிக்கையை எற்றுக் கொள்ள முடியாது எனவும், தேவ்யானியிடம் நடந்து கொண்ட விதம் விரோதப் போக்கில் செயல்படுவதைக் காட்டுவதாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தக் கைது நடவடிக்கையால் இரு நாட்டு உறவில் சிக்கலை ஏற்படும். எனவே தேவயானி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications