'கூப்புட்டா' வர மாட்டியா.. வீட்டையே துவம்சம் செய்த 'ஆங்கார லட்சுமி'!
அரிசோனா: அமெரிக்காவில் குடிபோதையில் நிர்வாணமாகிய ஒரு பெண், தனது காதலனை உறவுக்கு அழைத்தார். அவரோ வர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் வீட்டையே அடித்து நொறுக்கி விட்டார்.
காதலி குடித்திருந்ததால்தான் அந்த காதலன் உறவுக்கு வர மறுத்துள்ளார். ஆனால் நான் கூப்பிட்டு நீ வர மறுப்பதா என்று அந்தப் பெண்ணுக்கு ஈகோ... மொத்தத்தில் வீடு தரிசாகி விட்டது.
அரிசோனாவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் டென்ஷனை ஏற்படுத்தியுள்ளதாம்.

அவளும் பெண்தானே
அந்தப் பெண்ணின் பெயர் ஆஷ்லி மேரி பிரென்வோஸ்ட். அரிசோனாவின் கிளன்டேல் நகரில் வசித்து வருகிறார். இவருடன் காதலரும் வசித்து வருகிறார்.
குடிப்பதற்கு மனம் இருந்தால்
சம்பவத்தன்று மேரி வீட்டில் குடித்துள்ளார். ஆனால் காதலர் குடிக்கவில்லை. மேலும் குடிக்காதே என்றும் காதலியிடம் கூறியுள்ளார்.
என்னடி உலகம்.. அதில் எத்தனை கலகம்
ஆனால் மேரி கேட்கவில்லை. மாறாக வேண்டும் என்றே நிறையக் குடித்தார். குடித்ததோடு நில்லாமல் காதலரையும் வம்புக்கிழுத்தார்.
வை ராஜா வை.. உன் வலதுக் கையை வை
நல்ல குடிபோதையில், திடீரென நிர்வாணமானார் மேரி. அத்தோடு நில்லாமல் என்னுடன் உறவுக்கு வா என்றும் காதலனை அழைத்தார்.
என் வழி தனி வழி...
ஆனால் காதலரோ முடியாது என்று மறுத்தார். குடித்து விட்டுப் போதையில் இருக்கும் பெண்ணை நான் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் என்று கூறி விட்டார்.
துவம்சம் செய்தார் வீட்டை
கடுப்பாகிப் போன மேரி, பலமுறை காதலனை உறவுக்குக் கூப்பிட்டும் அவர் மசிய மறுத்தார். இதனால் வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் அடித்து நொறுக்கி விட்டார். இதனால் மேரியின் கைகளிலும், காதலர் கைகளிலும் காயம் ஏற்பட்டது. மேரியின் குழந்தைக்கும் அதில் காயம் ஏற்பட்டது.
விரைந்து வந்த போலீஸ்
இதையடுத்து மேரியின் காதலர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்தனர். அப்போது மேரி, நிர்வாண கோலத்தில் இருந்தார். போலீஸாரைப் பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார். ஆனால் அவர்கள் மடக்கிப் பிடித்து விட்டனர். தற்போது மேரி மீது பல பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது.
அவுஹ கூப்பிட்டா சமத்தா போயிருங்கப்பு...












Click it and Unblock the Notifications