கருணாநிதி பிறந்த நாள் + லோக்சபா தேர்தலில் 40க்கு 40 மெகா வெற்றி.. கேக் வெட்டி கொண்டாடிய அமீரக திமுக

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் அமீரக திமுகவினர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையும், தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் பெற்ற வெற்றியையும் கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது. அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ். மீரான் தலைமையில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திமுக தலைவர் கருணாநிதியின் 101ஆவது பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மக்களவை தேர்தல் வெற்றி கொண்டாட்டம் ஜூன் 5ஆம் தேதி புதன்கிழமை துபாய் "லேன்ட்மார்க் ஹோட்டல் பனியாஸ் ஸ்கொயர்" வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

dmk Karunanidhi lok Sabha election 2024

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியைத் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் வாரிய குழு உறுப்பினரும்,அமீரக திமுக பொறுப்பாளருமான எஸ்.எஸ்.மீரான் ஏற்பாடு செய்திருந்தார். அமீரக எழுத்தாளர் குழுமத்தின் ஆசிஃப் மீரான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வில், ஏஜிஎம் பைரோஸ்கான் வரவேற்புரை வழங்கினார்.

மீரான் பேச்சு: நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல வாரிய குழு உறுப்பினரும்,அமீரக திமுக அமைப்பாளருமான எஸ்.எஸ்.மீரான், கருணாநிதியின் சாதனைகளையும்,அவர் கண்ட கனவுகளையும் நினைவு கூர்ந்தார். மேலும் அவர், "மக்களவை தேர்தலில் திமுக தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு மிகவும் காரணமாக இருப்பது திராவிட இயக்க கொள்கைகளாகும். அதனை எதிர்காலத்தில் கொண்டு செல்வதற்கு நமது வீட்டுக் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும்..

தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளையும், தமிழ்நாட்டு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் வரலாற்றையும் படிக்க வேண்டும். திராவிட இயக்க சிந்தனைகள் அனைத்தையும் அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

திராவிடம்: சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில், கருணாநிதியின் நூற்றாண்டு கால சாதனையை நிலைப்படுத்தி, திராவிடம் என்ன செய்தது என்று கூறியதோடு, மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 40க்கு 40 என்ற பிரமாண்ட வெற்றியைச் சாத்தியமாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும் அவர் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் அமீரக காயிதே மில்லத் பேரவையின் ஹமீது ரஹ்மான்,கவிஞர் சசிக்குமார்,எழுத்தாளர் ஜெஸிலா பானு, காயிதே மில்லத் பேரவை பரக்கத் அலி, தமுமுக இப்ராஹிம், தமிழ் பண்பலை மகேந்திரன்,ஆர்ஜே சாரா, ரங்கராஜன் , கவிஞர் மரியம் கபீர் தாவூத், இஸ்மாயில், இன்ஜினியர் பாலா, வி கேர் மணிகண்டன், ஜோடானா நசீர் திருநாவுக்கரசு, தொழிலதிபர் மீட்டா மேக்ஸ் கருணை குமார், ஷேக் பரீத்,ஏ டி சி பி ஸ்ரீலேகா திருமதி சீலா,முத்தமிழ் சங்க ஷா, இர்ஷாத், பருத்தி இக்பால், இஞ்சினியர் பாலா,இளமுருகன்,ஃபரீத், தாரிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாக பிளாக் துளிப் செந்தில் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் திரிகூடபுரம் முஸ்தபா அஹமது கபீர், பாலா,உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்ற பாலா, பாருக், கொரடாசேரி ஜெகபர் அலி, அன்வர்,இஸ்மாயில், மச்சேந்திரன், வல்லரசு உள்ளிட்ட ஏராளமான அமீரக திமுகவினர் கலந்து கொண்டனர். பின்னர் கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு, கேக் வெட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+