For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"வாட்ஸ்அப்" மூலம் தவறான தகவல்களை பரப்பினால் ரூ.44 லட்சம் அபராதம்! அட இது எங்கப்பா!!

Google Oneindia Tamil News

துபாய் : வாட்ஸ் அப் மூலம், பிறரை திட்டுவது, தவறான கருத்துக்களை வெளியிட்டால் இந்திய மதிப்பில் ரூ.44 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று துபாய் அரசு தெரிவித்ததோடு, அதற்கான புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

உலக அளவில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நாடுகளில் ஒன்றாக திகழும் துபாயில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதன்படி, துபாயில் இலவசமாக வைபை வசதியும் வழங்கப்படுகிறது.

dubai

இதற்கிடையில், அந்நாட்டின் இலவச வைபை வசதியைப் பயன்படுத்தி, மற்றவர்களை திட்டுவதும், அந்நாட்டைப் பற்றி மோசமான செய்திகளை பகிர்ந்து கொள்வது போன்ற தவறான செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது.

இத்தகைய செயல்பாடுகளை கட்டுபடுத்தும் நடவடிக்கையாக, இந்த அபராத விதிக்கும் சட்டம் நிறைவெற்றப்பட்டுள்ளது.

அதன்படி, வாட்ஸ் அப் மூலமாக யாரையாவது திட்டினால் 2.5 லட்சம் திர்ஹாம் வரை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 44 லட்சம்) அபராதம் விதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க துபாய் போறீங்களா ? உஷார் !!!

English summary
Dubai Government Impliment a new law to curb misuse of Whatsapp
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X