துபாய்தான் உலகிலேயே மிகவும் பிசியான சர்வதேச ஏர்போர்ட்.. இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
துபாய்தான் உலகிலேயே மிகவும் பிசியான சர்வதேச விமானம் நிலையம் என்ற சிறப்பை பெற்று இருக்கிறது.
Recommended Video

அபுதாபி: உலகில் என்ன நடந்தாலும் துபாயை நோக்கி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மட்டும் குறைவதே இல்லை. ஒவ்வொரு வருடமும் இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பயணிகள் வருகையின் வளர்ச்சி விகிதம் குறைந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் துபாய்தான் உலகிலேயே மிகவும் பிசியான சர்வதேச விமானம் நிலையம் என்ற சிறப்பை பெற்று இருக்கிறது.
அதேபோல் உள்நாடு மற்றும் வெளிநாடு பயணிகளை சேர்த்து செய்யப்படும் கணக்கிலும் துபாய் முக்கிய இடம் வகிக்கிறது. மேலும் இந்தியாவும் இதில் முக்கியமான இடத்தில் இருக்கிறது.

வளர்ச்சி
கடந்த 9 வருடங்களில் இந்த வருடம்தான் துபாயின் பயணிகளின் எண்ணிக்கையின் வளர்ச்சி குறைந்து இருக்கிறது. சென்ற வருடம் 5.5சதவிகித வளர்ச்சி உருவாகி இருக்கிறது. இந்த வருடம் 2.4 சதவிகித வளர்ச்சி ஏற்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

எவ்வளவு
சென்ற வருடம் மட்டும் துபாய் சர்வதேச விமான நிலையத்தை 88.2 மில்லியன் மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இது சென்ற வருட 83.6ஐ விட அதிகம் ஆகும். இந்த வருடம் 2.4 சதவிகிதம் ஏற்பட்டு 90 மில்லியன் மக்கள் இதை பயன்படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

எந்த நாட்டு மக்கள்
இது சர்வதேச பயணிகளை மட்டும் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. துபாய்க்கு அதிகமாக சீன மக்கள் செல்கிறார்கள். 2.2 மில்லியன் மக்கள் அங்கு சென்று இருக்கிறார்கள். அதேபோல் ரஷ்யாவில் இருந்து 1.3 பில்லியன் மக்கள் அங்கு சென்று இருக்கிறார்கள்.

இந்தியாவின் இடம்
இந்தியாவிற்கு அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்யப்படுவதும், இறக்குமதி செய்யப்படுவதும் நடக்கிறது. சென்ற ஆண்டை விட டெல்லி விமான நிலையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகம் 5.4 சதவிகிதம் ஆகியுள்ளது. சென்ற ஆண்டு மட்டும் 12.06 மில்லியன் மக்கள் வந்து சென்று இருக்கிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications