”சர்ஃபிங் உலகின் தந்தை” டியூக்கின் 125வது பிறந்தநாள்- டுடூள் போட்டு கொண்டாடும் கூகுள்!
நியூயார்க்: சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு என்ற தக்கையால் செய்யப்பட்ட பலகையின் மீது ஏறி நின்று சீறும் அலைகளை எதிர்த்து முன்னேறி நகர்ந்து செல்லும் நீர் விளையாட்டு.
இந்த விளையாட்டின் தந்தை டியூக்கின் பிறந்த நாளை இன்று கூகுள் வழக்கம்போல டுடூள் போட்டுக் கொண்டாடுகிறது.
அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் ஹோனுலுலுவில் 1890 இல் பிறந்த டியூக் கஹானமோக்கு என்பவர் "சர்ஃபிங்" விளையாட்டின் தந்தை என்று அமெரிக்கர்களால் கருதப்படுகிறார்.

ஐந்து முறை ஒலிம்பிக்:
சிறுவயதிலிருந்தே நீச்சல் வீரராக இருந்த டியூக், அமெரிக்கா சார்பில் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்று ஐந்து முறை பதக்கம் வென்றிருக்கிறார்.

13 முறை:
இவர் குடியிருந்த பகுதியில் பதிமூன்று முறை "ஷெரிஃப்" எனப்படும் நகரத்தலைவர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சுமார் இருபது சினிமா மற்றும் டாக்குமெண்டரி படங்களிலும் நடித்துள்ளார்.

புகழ் பெற்ற சர்ஃபிங் வீரர்:
இவரது கடும் முயற்சியாலேயே அமெரிக்காவின் ஒரு சிற்றூராக இருந்த ஹவாய் பின்நாளில் மாநில அந்தஸ்தை அடைய முடிந்தது. இத்தனை சிறப்புகளுக்கும் உரியவரான டியூக் கஹானமோக்கு, உலகின் பல பகுதிகளுக்கும் பயணித்து சர்ஃபிங் விளையாட்டினை உலக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்ற தனிப்பெரும் புகழைப் பெற்றுள்ளார்.

சர்ஃபிங் டுடூள்:
அமெரிக்கர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் டியூக்கின் நூற்று இருபத்தைந்தாவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கூகுளின் மேட் க்ரூய்க்ஷான்க் என்கிற கலைஞர், டியூக் கஹானமோக்குவின் முகத்தை மற்றும் சர்ஃப் போர்டுடன் "டூடுள்"ஆக வடிவமைத்துள்ளார்.

மக்களே நினைவுகூறுங்கள்:
இன்று கூகுள் தேடுதளத்தில் அந்த டூடுள் இடம்பெற்று டியூக் கஹானமோக்குவின் சாதனையை உலக மக்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications