திருமணத்துக்குப் பிறகு வேறு நபருடன் பாலுறவு தவறில்லை- இது கொரிய நீதிமன்ற உத்தரவு!
சியோல்: திருமண உறவுக்கு அப்பால், ஆணோ, பெண்ணோ மற்றொரு நபருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை என்று தென் கொரிய அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தென் கொரியாவில் 1953-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 62 ஆண்டுகளாக அது நடைமுறையில் இருந்து வந்தது. அந்த சட்டத்தின்படி, ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர இன்னொரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண் தன் கணவரைத்தவிர இன்னொரு ஆணுடனோ செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் அது கிரிமினல் குற்றம் ஆகும்.
இந்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.

முறையற்ற உறவு அதிகரிப்பு
தென் கொரியாவில் இப்படி முறைகேடான பாலுறவில் ஈடுபடுவது அதிகரித்து வந்தது. கடந்த 1985-லிருந்து 53000 மீது இத்தகைய குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த ஆண்டு மட்டுமே 900 பேர் இப்படி குற்றம்சாட்டப்பட்டனர்.

தண்டிக்கப்பட்டவர்கள் குறைவு
ஆனால் இந்த வழக்குகளில் தண்டிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது. 2004-ம் ஆண்டு 216 பேர் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2008-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 42 ஆக குறைந்தது. அதன் பின்னர் 22 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கு
இந்த நிலையில், கணவர், மனைவி தவிர்த்து இரண்டாவது நபருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என்னும் சட்டத்துக்கு எதிராக அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

தப்பே இல்ல.. போங்கப்பா
இந்த வழக்கை நீதிபதி பார்க் ஹான் சல் தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில், முறைகேடான பாலுறவு கிரிமினல் குற்றம் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை 7 நீதிபதிகள் இணைந்து வழங்கினார்கள். 2 நீதிபதிகள் மட்டும் இதை எதிர்த்தனர். எனவே மெஜாரிட்டி தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 60 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்த சட்டம், செயலற்றுப்போய் விட்டது.

கண்டனைத்துக்குரியதுதான்.. ஆனா பர்சனலாச்சே!
தீர்ப்பில் நீதிபதி பார்க் ஹான் சல், "மற்றொரு நபருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது என்பது ஒழுக்கக்கேடானது என்ற வகையில் கண்டனத்துக்கு உரியது தான். ஆனால், தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் அரசாங்க அதிகாரம் தலையிடக் கூடாது," என கூறி உள்ளார்.

காண்டம் நிறுவனத்துக்கு கொண்டாட்டம்
இந்த தீர்ப்பை அடுத்து உலகின் மிகப்பெரிய ஆணுறை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று என்று கருதப்படுகிற தென்கொரியாவின் யுனிடஸ் கார்ப்பரேஷனின் பங்கு விலை நேற்று கிடுகிடுவென எகிறிவிட்டதாம்!












Click it and Unblock the Notifications