பயங்கர தூசு மண்டலம்... ஈரானின் 7 நகரங்களில் பள்ளிகள், அலுவலகங்கள் மூடல்.. மக்கள் பெரும் அவதி!
டெஹ்ரான்: ஈரானின் தென் மேற்கில் உள்ள கோசஸ்தான் மாகாணத்தில் பயங்கர காற்று மாசு காரணமாக 7 நகரங்களில் பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. வெளியில் வர முடியாத அளவுக்கு அங்கு தூசு மண்டலம் நிலவியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கட்டடங்கள், தெருக்களில் தூசு மண்டிக் கிடக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் வீடியோக்களை ஈரான் மக்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். #Khouzestancantbreath என்று பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் அது டிரண்டிங் ஆகி வருகிறது.

இந்தப் பிரச்சினையை சரி வர தீர்க்கத் தவறிய அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மீதும் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் கடுமையான வாதங்களும் நடந்து வருகின்றன.
ஈரானின் கோசஸ்தான் மாகாணத்தில் நீர் மேலாண்மை சரிவர செய்யப்படாத காரணத்தால் மாசு அதிகரித்து விட்டது. தற்போது அங்கு அபாயகரமான அளவில் காற்று மாசு காணப்படுகிறது. மூ்ச்சு விடக் கூட முடியாத அளவுக்கு காற்று மாசு இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தலைநகர் அவாஸ், அபடான், கோரம்ஷர் உள்ளிட்ட 7 நகரங்களில் பள்ளிகள், அலுவலங்களை மூட மாகாண நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கர்ப்பிணிப் பெண்கள், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினை உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சில நகரங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 66 மடங்கு அதிக அளவில் காற்று மாசு இருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்த புழுதி் மாசு மற்றும் தூசு மண்டலத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கோசஸ்தான் மாகாணத்தில் மழை குறைந்தது ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஈராக், சவூதியிலிருந்து வரும் தூசி அதிகரித்திருப்பது இன்னொரு காரணமாம். மேலும் நிலப்பரப்பு வறண்டு போயிருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சினை தொடர்பா கோசஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த எம்.பிக்களுடன் ஈரான் துணை அதிபர் மஸ்ஸோமோ எப்தகர் ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த ஆண்டு 33 முறை இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகவும், இந்த முறை இதுவரை 9 நாட்கள் மட்டுமே இப்பிரச்சினயை கோசஸ்தான் சந்தி்திருப்பதாகவும் துணை அதிபர் கூறியுள்ளார்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications