அமெரிக்கா பெயரை சொல்லாமல்.. வெனிசுலா குறித்து பேசிய ஜெய்சங்கர்! இந்தியாவின் நிலைப்பாடு இதுதான்

Subscribe to Oneindia Tamil

லக்ஸம்பர்க்: வெனிசுலா விவகாரத்தில் பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவை வெளிப்படையாக கண்டித்து வருகின்றன. ஆனால், இந்தியா மட்டும் இந்த விஷயத்தை தொட்டும், தொடாமலும் நகர்ந்து செல்கிறது. இந்நிலையில், லக்ஸம்பர்க் நகரில் வெனிசுலா நிலைமை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, "ஆம், வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து, வெனிசுலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைப் பொறுத்தவரை ஒரே நிலையை எட்ட வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பல ஆண்டுகளாக நல்லுறவு கொண்டிருந்த வெனிசுலா மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று கூறியுள்ளார்.

Venezuela US india

இந்தியாவுக்கு நெருக்கடி

வெனிசுலாவுக்கும் இந்தியாவுக்குமான உறவு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்தது. இருப்பினும், அமெரிக்காவின் எண்ணெய் தடை காரணமாக இந்த உறவு பாதிக்கப்பட்டது. இப்போது வெனிசுலாவில் இருந்து நாம் பெரிய அளவுக்கு எண்ணெய் வாங்குவதில்லை. அதேநேரம் அமெரிக்காவின் வரியும் இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது. கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பின்னலாடை நகரங்கள் சீக்கிரமே பாதிப்பை சந்திக்கும். ஏற்கெனவே பெறப்பட்ட ஆடர்களுக்கான உற்பத்தி விரைவில் முடிவடையும். இது முடிந்தால் புதிய உற்பத்தி அப்படியே சரியும்.

பிரிக்ஸ் நாடுகள்

அதேபோல, இந்தியாவின் பல நகரங்கள் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை பெரிய அளவில் நம்பியிருக்கின்றன. எனவே அமெரிக்காவுடன் சுமூகமாக போனால் மட்டுமே வரி விஷயத்தை சமாளிக்க முடியும். எனவேதான் அமெரிக்காவை இந்தியா வெளிப்படையாக கண்டிக்கவில்லை. ஆனால் இது பிரிக்ஸ் அமைப்பில் நமக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் வெளிப்படையாகவே அமெரிக்காவை தாக்கி பேசியிருக்கின்றன.

அழைப்பு விடுத்த இந்தியா

இந்தியா மட்டும்தான் அமெரிக்கா என்கிற வார்த்தையை கூட பயன்படுத்தாமல் இருக்கிறது. இந்நிலையில்தான் இந்த விவகாரம் குறித்து முதல் முறையாக ஜெய்சங்கர் பேசியிருக்கிறார். லக்ஸம்பர்க் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் சேவியர் பெட்டலுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். முன்னதாக, ஜன.4ம் தேதி வெளியுறவு அமைச்சகம் வெனிசுலாவின் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி, அமைதியான தீர்வுக்கு அழைப்பு விடுத்திருந்தது. நிலவரத்தை உன்னிப்பாக கண்காணிப்பதாகவும் அது குறிப்பிட்டது.

பேச்சுவார்த்தை வேண்டும்

வெனிசுலா மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கு இந்தியா மீண்டும் ஆதரவு தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், பிராந்திய அமைதியை உறுதி செய்ய பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளது. வெனிசுலா தலைநகரான கராகஸில் உள்ள இந்திய தூதரகம் இந்திய சமூகத்தினருடன் தொடர்பில் இருந்து அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் கூறியிருந்தது.

அவசர உதவி எண்

ஜன.3ம தேதி வெளியுறவு அமைச்சகம், இந்திய குடிமக்களுக்கான ஆலோசனையை வெளியிட்டது. வெனிசுலாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், அங்குள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவரச உதவிக்கு 58-412-9584288 (WhatsApp) என்கிற எண் மூலம், கராகஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+