ஆஸ்திரேலியாவின் ப்ரூம் அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. 6.4 ரிக்டராக பதிவு
ப்ரூம்: ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள ப்ரூம் நகரின் மேற்கு கடற்பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிக்டர் அளவில் 6.4 ஆக நிலநடுக்கத்தின் திறன் பதிவானதாக கூறப்படுகிறது
ப்ரூம் நகரின் மேற்கு கடற்பகுதியில் 33 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு நேரப்படி மதியம் 1:39 மணிக்கு ப்ரூம் மற்றும் போர்ட் ஹெட்லாண்ட் இடையே நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கிம்பர்லி என்ற பகுதி முழுவதும் மற்றும் கடற்கரையிலிருந்து பெர்த் வரை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அப்பகுதிளில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் ப்ரூம் நகரை சுற்றியுள்ள கட்டிடங்களுக்கு சிறியளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
ஆனால் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை. போர்ட் ஹெட்லாண்ட் மற்றும் ப்ரூமுக்கு இடையில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால், ஆஸ்திரேலிய நிலப்பகுதிக்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் பற்றி தகவல் தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம், கடலுக்கு அடியில் 33 கி.மீ ஆழத்தில், சுமார் 203 கி.மீ தூரத்தில் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய நிலப்பரப்பு, தீவுகள் அல்லது பிரதேசங்களுக்கு சுனாமியின் அச்சுறுத்தல் ஏதும் ஏற்படாது என்றும் அமெரிக்க நிறுவனமும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியால், மக்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். சிறிது நேரம் திறந்தவெளியில் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications