வேகமாக சுற்றும் பூமி! ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கிறதாம்! சத்தமில்லாமல் நடக்கும் மாற்றம்.. என்ன காரணம்
நியூயார்க்: இந்த உலகில் சத்தமில்லாமல் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. அப்படி தான் நமது பூமியின் சுழற்சி வேகம் பல கோடி ஆண்டுகளாக படிப்படியாகக் குறைந்து வருகிறதாம். நமது வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகரிக்கப் பூமியின் சுழற்சி மெதுவாக ஆவதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
'நேச்சர் ஜியோசயின்ஸ்' ஆய்விதழில் பூமியின் சுழற்சிக்கும் ஆக்சினுக்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவான போது, அதன் சுழற்சி விகிதம் மிக அதிகமாக இருந்துள்ளது. நிலவின் ஈர்ப்பு விசை காரணமாகப் பூமியின் சுழற்சி வேகம் மெல்லக் குறைந்து வருகிறது. இதனால் ஒரு நாள் என்பதன் நீளம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு ஆய்வுகளிலும் பூமியில் நடக்கும் இந்த மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பூமியின் நீளம்
1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாளின் நீளம் என்பது 18 மணி நேரமாகவே இருந்தது. இப்போது அது 24 மணி நேரமாக அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒரு நாளின் நீளம் சுமார் 1.8 மில்லி விநாடிகள் என்ற அளவில் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பூமியின் வேகம் குறைந்தால் என்ன அதிகரித்தால் என்ன என்று நீங்கள் கேட்கலாம்.. ஆனால், உண்மையில் பூமியின் சுழற்சியைப் பொறுத்தே இங்கு எல்லாம் இருக்கிறது.
அதிகரிக்கும் ஆக்சிஜன்
பூமியின் சுழற்சி வேகம் குறைந்தது, பூமியில் உயிரினங்களின் வளர்ச்சியில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஒளிச்சேர்க்கை (photosynthesise) மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் சயனோபாக்டீரியா எனப்படும் நீலப்பச்சை பாசிகளின் வளர்ச்சிக்கு இது உதவியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சுமார் 2.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த "கிரேட் ஆக்ஸிஜனேற்ற நிகழ்வு" (Great Oxidation Event) இதற்கான ஒரு சான்றாகும்.
நாட்களின் நீளம் அதிகரித்ததால் சயனோபாக்டீரியாக்கள் அதிக ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடிந்ததாகவும் இது செடி, கொடிகளின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியதாக அந்த ஆய்வு கூறுகிறது. இந்த நுண்ணுயிரிகளின் செயல்பாடு சூரிய ஒளியை மட்டும் சார்ந்தது அல்ல; அவற்றின் வளர்சிதை மாற்றச் செயல்முறைகளின் நேரத்தையும் சார்ந்ததாகவும். இவை அனைத்திற்கும் ஒரு நாளின் நீளம் அதிகரித்தது உதவியிருக்கிறது.
ஏன் முக்கியம்?
ஏனென்றால் சூரியன் உதயமான உடனேயே சயனோபாக்டீரியாக்களால் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியாது. கொஞ்ச நேரம் வார்ம் அப் ஆன பிறகே அதனால் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். இதனால் நாளின் நீளம் குறைவாக இருந்தால் ஆக்ஸிஜன் உற்பத்தி குறையும். அதேநேரம் நாட்களின் நீளம் அதிகரிக்கும்போது, அவை அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாளின் நீளத்திற்கும் இந்த நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனுக்கும் இடையே இருக்கும் தொடர்பை கடலியல் ஆராய்ச்சியாளர் பிரையன் ஆர்பிக் மற்றும் அவரது குழுவினர் உறுதிப்படுத்தினர். நீண்ட நாட்கள் என்பது "ஆக்ஸிஜன் விண்டோவை" (oxygen windows) விரிவுபடுத்தி, வளிமண்டல ஆக்சிஜனை அதிகரித்ததை அந்த குழு கண்டறிந்தது..
உறுதி செய்த ஆய்வுகள்
கிரேட் ஆக்ஸிஜனேற்ற நிகழ்வின் போது மட்டுமல்லாமல், 550 முதல் 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நியோப்ரோடரோசோயிக் ஆக்ஸிஜனேற்ற நிகழ்வின் (Neoproterozoic Oxygenation Event) போதும் இது நடந்ததாகக் கூறப்படுகிறது. பூமியின் சுழற்சியும், நிலவின் ஈர்ப்பு விசையும் நமது பூமியில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைக் காட்டும் வகையிலேயே இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications