11,000த்தைத் தாண்டியது எபோலா நோய் பலி – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
ஜெனிவா: எபோலா வைரஸ் நோய் தாக்குதலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கு கினியாவில் தொடங்கிய இந்த நோய் லைபீரியா, சியாராலியோன் ஆகிய நாடுகளுக்கும் வேகமாக பரவி மக்களின் உயிரை பறித்து வருகிறது.

இக்கொடிய வைரஸ் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்ட கினியா, நோய் லைபீரியா மற்றும் சியாராலேபான் ஆகிய நாடுகளில் மட்டும் 11,005 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லைபீரியாவில் தான் எபோலா நோய் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்நாட்டில் மட்டும் 4716 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது புதிதாக யாரும் அந்நாட்டில் எபோலாவால் பாதிக்கப்படாததால் வரும் மே 9 ஆம் தேதி லைபீரியாவில் எபோலா நோய் தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கினியா மற்றும் சியாராலியோன் ஆகிய நாடுகளிலும் இந்த நோயின் தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் மொத்தமாக 9 பேர் மட்டுமே எபோலாவினால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications