சொத்துக்களை முடக்கினால் கடனை திருப்பி தருவது கஷ்டமாகிவிடும்.. எச்சரிக்கிறாரா மல்லையா?
லண்டன்: பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு சென்றுவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவருக்கு சொந்தமான ரூ.1411 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் விஜய் மல்லையா விடுத்துள்ள அறிக்கை: தனக்கு எதிராக ஒருதலைப்பட்சமான விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கியில் பெற்ற கடன் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தவில்லை. வர்த்தக ரீதியில் இழப்பு ஏற்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருந்தும், தலைமறைவுக் குற்றவாளி என அறிவிக்க நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது ஏன்?.

இந்த விவகாரத்தில் சிபிஐ சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்திருப்பது வேதனை அளிக்கிறது. சிவில் வழக்கான இதை, கிரிமினல் நடவடிக்கைகளோடு இணைத்து விசாரணை நடக்கிறது. எனது சொத்துக்களை முடக்கியுள்ளதால் வங்கிகளில் பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதில் எனக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ள்து. கடன் தொகையை ஒரே தவணையில் செலுத்த ஏதுவாக பேச்சு நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும். இவ்வாறு மல்லையா தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை சொத்துக்களை முடக்கும் என அறிந்து மல்லையா அவசரமாக சில சொத்துக்களை விற்பனை செய்து மண்ணை தூவியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications