கமான் கேட்ச்... பச்சை முட்டையை உடையாம பளிச்னு பிடிச்சா பரிசு... இங்கிலாந்தில் நடந்த வேடிக்கை வினோதம்
லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற முட்டை எறியும் போட்டியில் இந்தாண்டு ஜெர்மனியை இங்கிலாந்து அணி தோற்கடித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள லிங்கன்ஷயர் மாகாணத்தில் உள்ள ஸ்வாடன் ( Swaton) என்ற கிராமத்தில் வித்தியாசமான முட்டை வீசும் போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்து நின்று போட்டியில் பங்கேற்றனர்.

இது தான் போட்டி...
ஒருவர் வீசும் முட்டையை 10 மீட்டர் தொலைவில் நிற்கும் மற்றொரு அணியைச் சேர்ந்த நபர் உடையாமல் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும் முட்டை எறியும் தூரம் அதிகரிக்கப் படும்.

இங்கிலாந்து வெற்றி...
1322ம் ஆண்டு முதலே இப்போட்டி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்தாண்டு நடைபெற்ற போட்டியில் ஜெர்மன் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

வேக வைக்காத முட்டை...
இதேபோல், மற்றொரு போட்டியில், ஒரிடத்தில் வைக்கப்பட்டு இருக்கும் 6 முட்டைகளில் வேக வைக்காத ஒரே ஒரு முட்டையை தலையில் உடைத்து பார்த்து கண்டுபிடிக்க வேண்டும்.

விழாக்கோலம்...
இந்த வித்தியாசமான போட்டிகளை நேரில் பார்த்து ரசிக்க ஏராளமான மக்கள் கூடியதால், அந்தக் கிராமமே விழாக்கோலம் பூண்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications