காதலனை முத்தமிட்டு ஐ லவ் யூ.. கட்டிப்பிடித்த பெண்.. பல்கலைக்கழகத்திலிருந்து டிஸ்மிஸ்
மாணவனை கட்டிப்பிடித்த மாணவியை பல்கலைக்கழகம் நீக்கி உத்தரவிட்டது.
கெய்ரோ: தன் காதலனை இறுக்கமா கட்டிப்பிடித்த காரணத்துக்காக பல்கலைக்கழகத்தில் இருந்து அம்மாணவி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
எகிப்தில் போன மாசம் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் கையில் பூங்கொத்துடன் வருகிறார்.
பிறகு திடீரென பெண் ஒருவர் முன் மண்டியிட்டு அப்பெண்ணுக்கு தன் காதலை தெரிவிக்கிறார். இதையடுத்து, அந்த பெண், தன் காதலனை இறுக்கமாக கட்டி அணைத்து கொள்கிறார்.

கட்டிப்பிடித்தார்
இந்த வீடியோதான் தாறுமாறாக வைரலானது. சம்பந்தப்பட்ட அந்த காதலன், பெண்ணின் சக மாணவர்தான். இருவரும், அல் அசார் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். ஆனால் இப்படி கட்டிப்பிடித்து கொண்டது அவர்களின் பல்கலைக்கழகத்தில் கிடையாது.

மாணவி டிஸ்மிஸ்
வேறு எங்கேயோ இருவரும் மனம்விட்டு பேசி இவ்வாறு செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த வீடியோ வைரலானதால், பல்கலைக்கழகத்துக்கும் விவகாரம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகம், மாணவியை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கி உத்தரவிட்டது.
கொள்கைக்கு எதிர்
"மாணவியின் இதுபோன்ற செயலால் பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது. கல்யாணம் ஆகாத ஒரு ஆணும், பெண்ணும் கட்டிப்பிடித்து கொள்வது சமுதாயத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. அதனால்தான் மாணவியை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கி உள்ளோம்" என்று காரணம் சொல்லப்பட்டுள்ளது.

மேல் முறையீடு
இதைக் கேட்டு மாணவி தரப்பு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். தான் நீக்கப்பட்டது குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், இது சம்பந்தமாக கோர்ட்டுக்கு போக போவதாக சொல்லி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
