ஐஎஸ் தலைவர் பாக்தாதியை கொல்லும் நபரை மணப்பேன்: எகிப்திய நடிகை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கெய்ரோ: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைபப்பின் தலைவர் பாக்தாதியை கொலை செய்யும் நபரை திருமணம் செய்து கொள்வேன் என்று எகிப்தை சேர்ந்த பிரபல நடிகை எல்ஹாம் ஷாஹின் அறிவித்துள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் செய்யும் அட்டூழியம் உலக மக்கள் அறிந்ததே. இந்நிலையில் எகிப்தை சேர்ந்த பிரபல நடிகையான எல்ஹாம் ஷாஹின்(55) கெய்ரோவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

Egyptian actress vows to wed IS leader's killer

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை கொலை செய்யும் நபரை நான் திருமணம் செய்து கொள்வேன். அவர் யாராக இருந்தாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி.

திருமணத்திற்கான அனைத்து செலவையும் நானே ஏற்பேன். மேலும் அவர் கனவில் கூட நினைத்துப் பார்த்திராத அளவுக்கு மகிழ்ச்சிகரமான தேனிலவை கொண்டாடலாம். அவர் விரும்பும் இடத்திற்கு நான் செல்வேன். அவரின் சேவகியாக இருப்பேன். பாக்தாதியை கொலை செய்தால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் அமைதி திரும்பும் என்றார்.

தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்துள்ள ஷாஹின் தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+