ஆஹா! அமெரிக்காவுக்கு வங்கதேசம் அனுப்பிய மெசேஜ்! இந்தியாவுக்கு சிக்கல்? மெல்ல மாறும் சர்வதேச அரசியல்
டாக்கா: இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே இப்போது மோசமான உறவே நிலவி வருகிறது. இதற்கிடையே வங்கதேசத்தில் இருந்து இப்போது அமெரிக்காவுக்கு திடீர் மெசேஜ் பறந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய சகாவாக கருதப்படும் எலான் மஸ்கிற்கு வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அனுப்பியுள்ள கடிதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே மிகச் சிறப்பான உறவு இருந்து வந்தது. ஆனால், அங்கு எப்போது ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்ததோ அப்போது முதலே இரு நாட்டு உறவு மோசமடைய தொடங்கியது.

முகமது யூனுஸ்
வங்கதேசத்திற்கு இப்போது முகமது யூனுஸ் தலைமை ஏற்றுள்ள நிலையில், அங்கு மத சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகியுள்ளன. இதனால் இரு தரப்பிற்கும் இடையே உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே வங்கதேசத்தில் இருந்து திடீரென அமெரிக்காவுக்கு ஒரு மேசேஜ் பறந்துள்ளது. இது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அதாவது வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ், ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். எலான் மஸ்கை டாக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள முகமது யூனுஸ், வங்கதேசத்தில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.. ஸ்டார்லிங்க் தொழில்நுட்பம் மூலம் வங்கதேச இளைஞர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
கடிதம்
இது தொடர்பாக அவர் மேலும், "ஒரு சிறந்த எதிர்காலத்தை அமைக்க இருவரும் இணைந்து வேலை செய்வோம். வங்கதேசத்தின் உள்கட்டமைப்பில் ஸ்டார்லிங்கை கொண்டு வருவது மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும். குறிப்பாக வங்கதேச இளைஞர்கள், கிராமங்களில் வசிப்போர், பெண்கள், பின்தங்கிய சமூகங்களில் இது மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முகமது யூனுஸ் தனது உயர் பிரதிநிதி கலீலுர் ரஹ்மானிற்கும் இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் குழுவுடன் ஒருங்கிணைந்து பணியாற்றவும் தேவையான அனுமதிகளை விரைந்து வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தேவையான அனைத்து அனுமதிகளும் விரைந்து வழங்கி, அடுத்த 90 நாட்களில் வங்கதேசத்தில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்கப்படுவதை உறுதிசெய்யவும் அவர் உத்தரவிட்டார்.
எலான் மஸ்க்
முன்னதாக கடந்த வாரம் தான், ஸ்டார்லிங் சேவை தொடர்பாக எலான் மஸ்க் உடன் முகமது யூனுஸ் உரையாற்றினார். அப்போதே தேவையான அனுமதிகளை வழங்க யூனுஸ் உறுதி அளித்தார்.. எலான் மஸ்கும் வங்கதேசத்தில் தனது சேவைகளை விரிவுபடுத்த ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். எலான் மஸ்க்கிற்கும் டிரம்ப்பிற்கும் இடையே நல்லுறவு இருப்பது அனைவருக்கும் தெரியும்.
வங்கதேசத்திற்கு ஸ்டார்லிங்க் டீல் ஓகே ஆகும்பட்சத்தில், டிரம்ப் நிர்வாகம் கூட வங்கதேச விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றும் என்றே தெரிகிறது. அதேநேரம் இதனால் இந்தியாவுக்கு எந்தவொரு சிக்கலும் வராது என்றும் டிரம்ப் மோடி நல்லுறவு இதனால் பாதிக்கப்படாது என்றுமே சர்வதேச வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஸ்டார்லிங்க்
எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் சூழலில் அதில் முக்கியமானது ஸ்டார்லிங்க். இந்த ஸ்டார்லிங்க் அவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். சாட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்குவதே ஸ்டார்லிங்கின் நோக்கம்.. அதாவது வழக்கமான டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு டவரை வைத்து அதன் மூலம் இணையச் சேவை வழங்கும். ஆனால், ஸ்டார்லிங்கிற்கு அதுபோல டவர் எல்லாம் இல்லை..
நேரடியாக விண்வெளிக்கு சாட்டிலைட் அனுப்பி, அதன் மூலமே இணையச் சேவை வழங்கும். டெலிகாம் நிறுவனங்களால் கிராமப்புற பகுதிகளில் இணையச் சேவை வழங்குவதில் சிக்கல் இருக்கும். ஆனால் உலகின் எந்தவொரு மூலைக்கும் ஸ்டார்லிங்க் மூலம் இணையச் சேவை வழங்க முடியும் என்பதே இதன் சிறப்பாகும்.
-
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications