பூமியை விடுங்க.. மொத்த பிரபஞ்சமே சீக்கிரமா அழிய போகுது! மனித குலம் என்ன ஆகும் தெரியுமா!
ஆம்ஸ்டர்டம்: பூமி அழியப்போவதாக பல்வேறு செய்திகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் மொத்த பிரபஞ்சமும் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் தற்போது அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
நெதர்லாந்தின் நிஜ்மெகனில் உள்ள ராட்பவுட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. அவர்கள் செய்த ஆராய்ச்சி, 'ஜர்னல் ஆஃப் காஸ்மோலஜி அண்ட் ஆஸ்ட்ரோபார்டிகல் பிசிக்ஸ்' எனும் இதழில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வாளர்கள் ஹாக்கிங் கதிர்வீச்சின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர். 1970ல் ஸ்டீபன் ஹாக்கிங் இந்த கதிர்வீச்சை கண்டுபிடித்தார். அதாவது பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளையிலிருந்து கதிவீச்சு வெளியேறும். இப்படி வரும் கதிர்வீச்சுகள், காலப்போக்கில் குறைந்து காணாமல் போகும். இதன் அர்த்தம், பிளாக் ஹோல் ஆவியாகிவிட்டது என்பதுதான். இதே முறையை கொண்டு நமது பிரபஞ்சம் எவ்வளவு காலம் வரை இருக்கும் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
10110010^1100}101100.. இத்தணை ஆண்டுகள் வரை பிரபஞ்சம் இருக்கும் என்று முன்னர் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 107810^78}1078 ஆண்டுகளில் அது அழிந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேற்குறிப்பிட்ட எண்கள் நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்த கூடும். இதை எளியதாக புரிந்துக்கொள்ளலாம்.
நமது பால்வெளி அண்டத்தின் தற்போதைய வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இதனை 10^10 என எழுதலாம். அதேபோல ஒரு கருந்துளை ஆவியாகும் நேரம் (ஹாக்கிங் கதிர்வீச்சு மூலம்) 10^67 - 10^100 ஆண்டுகள். சூரியன் இப்போது இருக்கும் அளவை விட அதிகரித்து, பூமியை விழுங்கும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர். இது நடக்க 10^100 ஆண்டுகள் ஆகும். அதாவது பத்து என்கிற எண்ணுக்கு பக்கத்தில் 100 பூஜ்ஜியங்களை போட்டால் எவ்வளவு வருமோ, அதுதான் இந்த எண்ணிக்கை. இது எல்லாவற்றையும் விட மேற்குறிப்பிட்ட எண்கள் பெரியது.
சரி இந்த சமயத்தில் மனிதர்கள் என்ன ஆவார்கள்? எங்கு இருப்பார்கள்? உயிரோடு இருப்பார்களா? அல்லது முற்றிலுமாக அழிந்துபோய் இருப்பார்களா? என்று கேள்விகள் எழலாம்.
இதற்கான பதில்கள் விஞ்ஞானிகளிடம் இல்லை. ஆனால் சூரியன் பெரியதாக மாறி, பூமியை விழுங்குவதற்குள் நாம் இன்னொரு கிரகத்திற்கு போயிருப்போம். அல்லது முற்றிலுமாக மனித இனம் என்கிற ஒன்று இல்லாமல் போயிருக்கும் என்று கூறுகின்றனர். இப்போது புரிகிறதா விண்வெளி துறையான இஸ்ரோவுக்கு ஏன் இவ்வளவு நிதியை நமது அரசு ஒதுக்குகிறது என்று.
நமக்கு எதிரே பல சவால்கள் இருக்கின்றன. ஒன்று இன்னொரு கிரகத்திற்கு போக வாகனத்தை தயார் செய்வது. நமக்கு பக்கத்திலிருக்கும் செவ்வாய் கிரகத்திற்கு போக வேண்டும் என்றால் கூட 6 மாத காலம் ஆகிறது. இந்த வேகம் எதிர்காலத்தில் பத்தாது. அப்படியெனில் அதிவேகத்திற்கு தேவையான எரிபொருளை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு அணு ஆற்றலை சிறப்பாக பயன்படுத்த வேண்டும்.
அதற்கு முன்னர் பூமி போன்ற ஒரு கிரகத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அதில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் மனித இனம் என்கிற ஒன்று இருக்கும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications