தமிழ்நாட்டில் தான் இருக்கிறேனோ என சந்தேகம்.. ஜப்பானில் உற்சாக வரவேற்பால் முதல்வர் நெகிழ்ச்சி
டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோ நகரில் அங்கு வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இந்த கூட்ட அரங்குக்குள் வந்ததில் இருந்து தமிழ்நாட்டிற்குள் தான் இருக்கிறேனோ என்ற சந்தேகம் என்னுடைய உணர்விலே கலந்து விட்டது. அந்த அளவுக்கு உங்கள் வரவேற்பும் உற்சாகமும் வெளிப்படுத்தப்படும் நேரத்தில் அதை நான் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக 9 நாள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை தமிழ்நாட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் தற்போது ஜப்பானில் சுற்றுப்பயணத்தில் உள்ளார். ஜப்பானில் முதலீட்டாளர்களையும் தொழில்நிறுவனங்களின் சி இ ஒக்களையும் முதல்வர் தனது பயணத்தின் போது சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று ஜப்பான் வாழ் தமிழர்கள் மத்தியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- என்னுடைய நிகழ்ச்சி நிரலில் எப்போதுமே அரசு நிகழ்ச்சி அல்லது அரசியல் என ஓய்வு இல்லாமல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நான் கலந்து கொள்ளக் கூடிய நிலையிலேயே இருந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் அதற்கெல்லாம் நேர்மாறாக நான் இங்கு கண்ட கலைநிகழ்ச்சிகளும் உற்சாக வரவேற்பும் என்னையே நான் மறந்து போயிருக்கிறேன்.
மறந்து மட்டும் இல்லை.நெகிழ்ந்து போயிருக்கிறேன். உணர்ச்சியோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். மிக நேரத்தியாக நம்முடைய கலைநிகழ்ச்சிகளை நடத்திக் காட்டிய நம்முடைய மாணவ செல்வங்கள், கலையை எந்த அளவு வெளிப்படுத்தி காட்டியிருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது நான் உள்ளபடியேமகிழ்ச்சி அடைகிறேன். இந்த அரங்குக்குள் நான் வந்ததில் இருந்து தமிழ்நாட்டிற்குள் தான் இருக்கிறேனோ என்ற சந்தேகம் என்னுடைய உணர்விலே கலந்து விட்டது.
அந்த அளவுக்கு உங்கள் வரவேற்பும் உற்சாகமும் வெளிப்படுத்தப்படும் நேரத்தில் அதை நான் உணர்கிறேன். அதற்காக நான் மீண்டும் மீண்டும் இதயப்பூர்வமான வணக்கத்தை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சூரியன் உதிக்கும் நாடு ஜப்பான். ஜப்பான் என்றால் உழைப்பு சுறுசுறுப்பு உழைப்பாளர்களின் நாடு இது. விழுந்த வேகத்தில் எழுச்சி பெற்ற நாடு ஜப்பான். 2 ஆம் உலகப்போரின் போது அணுகுண்டு வீசப்பட்டு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டாலும் மிக குறுகிய காலத்தில் எழுந்து நின்று உலகில் தவிர்க்க முடியாத.. சக்தி மிகுந்த பொருளாதார நாடாக ஜப்பான் மாறியிருக்கிறது.
ஜப்பான் மக்களின் உழைப்பால் தான் இது சாத்தியமானது. ஜப்பான் - தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக மொழி ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இரண்டு ஒரே மாதிரியான இலக்கண கட்டமைப்பு கொண்ட நாடு என்று சொல்லப்படுகிறது. தமிழர்கள் ஜப்பான் மொழியை படிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஜப்பானியர்களும் தமிழை கற்க முயற்சிக்கிறார்கள்.
பேராசிரியர் சுசுமோ ஓனோ அவர்கள் தனது வாழ்க்கையில் 30 ஆண்டுகள் தமிழ், ஜப்பான் மொழிகளுக்கு இடையேயான தொடர்புகளை ஆய்வு செய்து இருக்கிறார். அமைப்பு ரீதியாகவும் இலக்கண வழியாகவும் இரண்டு மொழிகளுக்கும் ஒற்றுமை இருப்பதை 1970 ஆம் ஆண்டே கண்டுபிடித்து சொன்னவர் அவர்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈம தாழிகளில் உள்ள எழுத்துக்களுக்கும் தமிழ்நாட்டின் பெருங்கற்கால பண்பாட்டின் ஈம தாழிகளில் உள்ள எழுத்துக்களுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதை கண்டுபிடித்தவர். சில சொற்களை சொல்லி அவை தமிழில் இருந்து ஜப்பானுக்கு வந்ததாக அவர் சொல்கிறார். சுசுமோ ஓனோ எழுதிய ஜப்பானியன் மொழியின் வேர்களைத் தேடி என்ற நூல் மொழி அறிஞர்களால் வாசிக்கப்பட்ட புத்தகமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
-
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications