பூமி மீது விழுந்த விண்கல்.. பகல் போல் மாறிய இரவு வானம்! கிரேட் எஸ்கேப்
மணிலா: விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று தொடர்ந்து ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், பிலிப்பைன்ஸ் அருகே விண்கல் ஒன்று விழுந்திருப்பது மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது அளவில் பெரியது இல்லை என்பதால், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஆசிய கண்டத்தின் அற்புதமான சில நாடுகளில் பிலப்பைன்ஸும் ஒன்று. இங்கு ஒளி மாசு ஒப்பிட்டளவில் குறைவாக இருப்பதால், இரவு வானத்தை வெறும் கண்களால் பார்த்து ரசிக்க முடியும். அதாவது, ஒளி மாசு குறைவாக இருக்கும் பகுதியில்தான் பிரபஞ்சத்தின் சில பகுதிகளை வெறும் கண்களால் பார்க்க முடியும். நேற்று இரவும், பிலிப்பைன்சில் வானம் இப்படித்தான் வழக்கமான இருளாக இருந்தது. ஆனால், திடீரென சூரியனை போன்ற வெளிச்சம் தோன்றி மறைந்திருக்கிறது.

பலருக்கும் இந்த வெளிச்சம் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து விஞ்ஞானிகள் தற்போது விளக்கமளித்துள்ளனர். அதாவது 2024 RW1 எனும் விண்கல் பூமியின் மீது மோதியதன் விளைவாகவே இந்த வெளிச்சம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இப்படி ஒரு விண்கல் பூமிக்கு பக்கத்தில்தான் இருக்கிறது என்பதையே செப்.2ம் தேதிதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது சுமார் ஒரு மீட்டர் அளவுள்ள கல்லாகும். இந்த கல் பூமியின் மீது மிக வேகமாக மோதியிருக்கிறது. வழக்கமாக தினமும் சில வின்கற்கள் பூமியின் மீது மோத தான் செய்கிறது. ஆனால் அவை அளவில் சிறியதாக இருப்பதால், வளிமண்டலத்தில் உரசி தீப்பற்றி எரிந்து சாம்பலாகிவிடுகிறது. அதேபோல 2024 RW1 விண்கல்லும் எரிந்து சாம்பலாகியுள்ளது. இது எரிந்தபோது ஏற்பட்ட வெளிச்சம்தான் மொத்த பிலிப்பைன்ஸையே ஒரு விநாடிக்கு வெளிச்சமாக்கியுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அளவில் சிறியதாக இருந்தால் பூமி தப்பித்துவிட்டது. இதே பெரிய சைஸில் இருந்தால் பாதிப்புகள் நிச்சயம் ஏற்பட்டிருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.
அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தற்போது நடந்த விண்கல் நிகழ்வு, விண்வெளி துறை ஆய்வுக்காக நாம் செலுத்திய நம்முடைய முதலீடுகள் வீண் போகவில்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications