For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துருக்கி அதிபருக்கு யார் எதிரி.. யாருக்கு அவர் எதிரி.. பளிச் பருந்து பார்வை

By Veera Kumar
Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: துருக்கி அதிபர் ரெசப் தாயிப் எர்டோகன் ஆட்சிக்கு எதிராக ஏன் இந்த திடீர் ராணுவ புரட்சி என்பதை அறிந்து கொள்ள அவருக்கு யார் நண்பர்கள், யார் எதிரிகள் என்பதை தெரிந்து கொள்வதும் அவசியம்.

அதுகுறித்த ஒரு பருந்துப் பார்வை இதோ:

எகிப்தில் அரசுக்கு எதிரான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு எர்டோகன் ஆதரவு அளித்தார்.

சிரியா நாட்டு அதிபர் பஷர் அல்-ஆசாத் எர்டோகனுக்கு ஆகாதவர். பஷருக்கு எதிரான குழுக்களுக்கு எர்டோகன் ஆதரவு அளித்தார். எனவே, அல்-ஆசாத்துக்கு ஆதரவான ஈரானும், லெபனானும் எர்டோகனை எதிராக கருதி வருகின்றன.

Erdogan Who hate him, whom he hates

சிரியாவில் அல் ஆசாத்துக்கு எதிரான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந் நிலையில் சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவின் எஸ்யூ-24 ரக விமானம், துருக்கி எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே ரஷ்ய அதிபர் புடினுக்கு, எர்டோகன் ஜென்ம பகைவனாகினார்.

துருக்கி மக்கள் தொகையில் குர்து இன மக்கள் 20 சதவீதம் உள்ளனர். ஆனால் அவர்களது உரிமைகளை எர்டோகன் அரசு பறித்து வருவதோடு, வாழ்வாதாரத்தையும் பறித்து வருகிறது. இதனால் அவர்களும் எர்டோகனை வெறுக்கிறார்கள்.

English summary
Erdogan supported Muslim Brotherhood and antagonised Egyptian new regime. Erdogan hates Syrian president Bashar al-Assad and supports anti Basha elements, so Iran and Lebanon hate him. Turkey shot down a Russian SU-24 warplane which it said had strayed intothe country's airspace near Syria and so Putin hates him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X