இறந்த உடலை தோண்டி எடுத்து உயிரூட்ட முயன்றவர் கைது
இறந்த உடலுக்கு உயிரூட்ட முடியாமல் போனதால் எத்தியோப்பியாவில் சாமியாராக முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பிலே பிஃப்ட்டு எனும் நபரின் உடலின் மீது படுத்துக்கொண்டு, கெடாயாகால் அய்லீ எனும் அந்த நபர் "பிலே எழுந்திரு!'' என்று மீண்டும் மீண்டும் கத்திக்கொண்டிருந்தார்.
எத்தியோப்பியாவில் ஒரோமியா பகுதியிலுள்ள கலிலீ எனும் சிறு நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பைபிளில், இறந்துபோன லாசரசை ஏசுநாதர் உயிர்தெழச் செய்யும் கதையைக் அய்லீ சொல்லிக் கேட்ட பிலே பிஃப்ட்டுவின் குடும்பத்தினர், அய்லீ பிலேவை உயிர்தெழச் செய்யும் முயற்சிக்கு ஒப்புதல் தெரிவித்தனர்.
இறந்த பிலேவின் உடல் இந்த சடங்கிற்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. அய்லீயின் முயற்சி பலனளிக்காததால், அவர்கள் அவரைத் தாக்கத் தொடங்கினர்.
- 'மம்மி' பாணியில் இறந்த தாயின் சடலத்தை 3 ஆண்டுகள் பாதுகாத்த மகன்
- விஜயநகர சாம்ராஜ்ய கோட்டையில் தங்கப்புதையலா?
சற்று நேரத்தில் தகவல் அறிந்த காவல் துறையினர், அங்கு வந்து அவரை இறந்தவரின் குடும்பத்தினரிடமிருந்து காப்பாற்றினர். எனினும், இத்துடன் அய்லீக்கு சிக்கல் முடியவில்லை.
இறந்த உடல்களை தவறாக பயன்படுத்துவது எத்தியோப்பியச் சட்டப்படி குற்றம் என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
சுகாதார பணியாளாரான கெடாயாகால் அய்லீ தற்போது சிறையில் உள்ளார்.
இறந்த உடலுக்கு அய்லீ உயிரூட்ட முயலும் காணொளி சமூக வளைத் தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பிற செய்திகள்:
- திருப்பூர்: 'பள்ளியில் தலித் பெண் சமைப்பதை எதிர்த்த சாதி இந்துக்கள் தலைமறைவு'
- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவை அதிமுக ஆதரித்தது ஏன்?
- இஸ்ரேல் - பாலத்தீன எல்லையில் சண்டை: 5 பேர் பலி
- ஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications