Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்காவுக்கு எதிராக.. முக்கிய ஆயுதத்தை கையில் எடுக்கும் ஐரோப்பிய யூனியன்! டிரம்புக்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: கிரீன்லாந்து விஷயத்தில் ஐரோப்பிய நாடுகள் குறுக்கே நிற்பதால், அந்நாடுகளுக்கு வரியை விதிக்க டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், இந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக முக்கிய ஆயுதத்தை கையில் எடுத்திருக்கின்றன.

கிரீன்லாந்து என்பது டென்மார்க்கின் பாதுகாப்பில் இருக்கும், சுதந்திரமான நாடு. அந்நாட்டில் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கின்றன. எனவே அந்நாட்டை கைப்பற்ற டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். ஆனால், இதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இன்னைக்கு கிரீன்லாந்துனு சொல்லுவீங்க, நாளைக்கு எங்க நாட்டை ஆக்கிரமிக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? என டிரம்புக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் வரிசை கட்டியுள்ளன.

EU US trade

டிரம்பின் அச்சுறுத்தல்

இதனை சமாளிக்க, தனது வழக்கமான ஆயுதமான வரியை டிரம்ப் கையில் எடுத்திருக்கிறார். ஐரோப்பிய நாடுகளின் பொருட்கள் மீது பிப்ரவரி 1 முதல் 10% சுங்க வரி விதிப்பதாக அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனின் வர்த்தக ஒப்பந்தம் குறித்த ஒப்புதலை, அமெரிக்காவுடன் கைவிட ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற எம்பிக்கள் தயாராகி வருகின்றனர்.

அரசியல் ஆட்டம்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின், மிகப் பெரிய அரசியல் குழுவான 'ஐரோப்பிய மக்கள் கட்சியின்' தலைவர் மேன்ஃப்ரிட் வெபர், "அமெரிக்காவுடன் இத்தருணத்தில் உடன்பாட்டை எட்டுவது சாத்தியமில்லை. ஐரோப்பிய யூனியன்-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எங்களது கட்சி ஆதரவாக உள்ளது. ஆனால், கிரீன்லாந்து தொடர்பான டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, இத்தருணத்தில் இதற்கு ஒப்புதல் அளிப்பது இயலாது. மேலும், அமெரிக்கப் பொருட்களின் மீதான வரிகளை குறைப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.

சீரியஸான மேட்டர்

இவர் சொல்வதை சீரியஸாக பார்க்க வேண்டும். ஏனெனில், இந்த கட்சியின் ஆதரவு இல்லாமல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில், மசோதாவை நிறைவேற்ற முடியாது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 720 இடங்கள் இருக்கின்றன. இதில், 188 இடங்களில் இந்த கட்சிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. பெரும்பான்மைக்கு 361 இடங்கள் தேவை என்றாலும், கூட்டணி என்று வரும்போது இக்கட்சியின் தேவை அதிகம். எனவே இக்கட்சி இல்லாமல் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் எதுவும் நடக்காது. ஆகவேதான் இதை அமெரிக்கா சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளின் ஆயுதம்

மறுபுறம் 'எதிர்ப்பு கட்டாய கருவி' (ACI) எனும் ஆயுதத்தை பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் யோசித்து வருகிறது. தங்களை பொருளாதார ரீதியில் மிரட்டும் நாடுகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கவே இந்த ஆயுதம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் அமெரிக்காவும், சீனாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக பொருளாதார நடவடிக்கையில் இறங்கியிருந்தன. எனவே, இந்த ஆயுதத்தை ஐரோப்பிய நாடுகள் உருவாக்கி வைத்திருந்தன.

அமெரிக்காவுக்கு சிக்கல்

இந்த ஆயுதத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகரிக்கவும், நிரந்தர தடையை விதிக்கவும் முடியும். அதேபோல, அமெரிக்க வங்கி, காப்பீடு போன்ற சேவைகளை ஐரோப்பாவில் தடை விதிக்க முடியும். மட்டுமல்லாது அமெரிக்காவின் முதலீட்டை தடுக்கவும் முடியும். இப்படி செய்தால் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

யோசிக்கும் டிரம்ப்

ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான், மெட்டா போன்றவற்றை இந்த ACI ஆயுதம் நேரடியாக தாக்கும். இது மட்டும் நடந்தால் உலக வர்த்தக போர் தொடங்கிவிட்டது என்று அர்த்தம். எனவே கிரீன்லாந்து விஷயத்தில் டிரம்ப் நின்று நிதானமாக மூவ் செய்ய தொடங்கியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+