பிரபாகரன் மே 15 வரை களத்தில் இருந்தார்.. உயிரோடு இல்லை.. உடலும் அவருடையது இல்லை- குழப்பும் போராளிகள்
பிரபாகரன் குறித்து அவரது முன்னாள் பாதுகாவலர்கள் சிலர் குழப்பமான கருத்துகளை கூறி வருகின்றனர் என தெரிகிறது.
கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் 2009-ம் ஆண்டு மே 15-ந் தேதி வரை களத்தில் போராடினார்.. நாங்கள் உடனிருந்தோம்.. இருந்தாலும் பிரபாகரன் உயிரோடு இல்லை.. ஆனாலும் இலங்கை அரசு காட்டியது பிரபாகரன் உடலும் இல்லை என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சிலர் குழப்பமான கருத்துகளை கூறி வருகின்றனர்.
இலங்கையில் 2009-ம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கைவிட்டு மவுனித்துக் கொண்டது. அப்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டு அவருடைய உடல் என சடலம் காட்டப்பட்டது.

ஆனால் 2009-ம் ஆண்டு முதலே பிரபாகரன் உயிருடனே இருக்கிறார் என்கிறார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன். இருந்த போதும் மகன்கள் சார்லஸ், பாலச்சந்திரன் உள்ளிட்டோரை பலி கொடுத்துவிட்டா பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார்? என விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இதனால் பிரபாகரன் மரணம் தொடர்பாக மர்மங்கள் நீடித்தன.
இந்த சூழலில் திடீரென தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் இருக்கிறார்; அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் உலகத் தமிழருக்கு இதனை அறிவிக்கிறேன் என்றார். இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பழ.நெடுமாறன் திடீரென இந்த அறிவிப்பை வெளியிடக் காரணம் என்ன என்பது தொடர்பான அலசல்களும் தொடருகின்றன.
பிரபாகரன் உயிருடனேயே இல்லை; அவரது உடலை எரித்துவிட்டோம்; பிரபாகரன் உயிருடன் இருக்க சாத்தியமே இல்லை என்பது இலங்கை அரசு மற்றும் ராணுவத்தினரின் திட்டவட்டமான கருத்து. ஆனால் தமிழ்த் தேசியம் பேசுகிற இலங்கை தமிழ் தலைவர்களோ முரண்பாடான கருத்துகளை கூறி வருகின்றனர்.

இந்த வரிசையில் பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர்களாக இருந்தவர்கள் என சில போராளிகளின் பேட்டிகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இவர்களது பேட்டிகளில் 2009-ம் ஆண்டு மே 15-ந் தேதி வரை பிரபாகரன் களத்தில்தான் இருந்தார். கடைசியாக நந்திக் கடல் பகுதிக்கு சென்றார். இருபக்கமும் நிலப்பரப்பு மற்றொரு பக்கம் நந்திக் கடல். இன்னொரு பக்கம் கடற்பரப்பு. அதன்பின்னர் பிரபாகரனுக்கு என்ன நடந்தது என தெரியாது. பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பது கசப்பானதுதான். ஆனாலும் இலங்கை ராணுவம் காட்டியது பிரபாகரனுடைய உடல் அல்ல என்கின்றனர்.
இது தொடர்பாக முன்னாள் போராளிகள் சிலருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் பிரபாகரன், பாதுகாவலர்கள் உட்பட யாருடனும் தொடர்பில் இல்லாமல்தான் இருந்தார். அதனால் பிரபாகரனுக்கு என்னதான் நடந்தது என்பது யாருக்குமே தெரியாது. பிரபாகரன் உயிருடன் இருந்து அவராக இதனை அறிவிக்கும் வரை இப்படியான மர்ம கதைகளும் பேச்சுகளும் அறிவிப்பும் உலாவரத்தான் செய்யும் என்கின்றனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications