ராஜிவ் அழகானவர் என்பதால் திருமணம் செய்த சோனியா: சொல்வது பாக். முன்னாள் அமைச்சர்
இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அழகானவர் என்பதாலேயே சோனியா காந்தி திருமணம் செய்து கொண்டார் என பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
கடந்த 2005-ஆம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் இந்தியப் பயணம் குறித்து சோனியாவை சந்தித்துப் பேசினார். அதுகுறித்து தற்போது தான் எழுதியுள்ள "நெய்தர் எ ஹாக் நார் எ டவ்' என்ற புத்தகத்தில் குர்ஷித் கசூரி கூறியுள்ளதாவது:

சோனியா காந்தியுடன் திட்டமிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ சந்திப்புக்கு முன்னதாக காத்திருப்பு அறையிலேயே அவரைச் சந்தித்தேன். அவர் அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்குடன் வந்திருந்தார்.
அப்போது, சோனியாவிடம் கை குலுக்கி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சோஹைல் இப்திகாருடன் நான் நடைபயிற்சி சென்ற நிகழ்வுகளை நினைவுபடுத்த எண்ணினேன். (காந்தி, நேரு ஆகியோருடன் நெருக்கத்தில் இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் மியான் இஃப்திகாரின் மகன் சோஹைல்).
சோஹைலுடன் நான் நடைபயிற்சி செல்லும் போது எங்களுக்கு எதிர் திசையில் ஓர் அழகான இளைஞர் நடந்து வருவார். அவர் யார் என்று நான் கேட்டபோது, அவர் நேருவின் பேரன் ராஜிவ் காந்தி என்று சோஹைல் பதில் அளித்தார்.
இந்த நிகழ்வுகளை சோனியாவிடம் விவரித்து, ராஜிவ் காந்தியை அழகான இளைஞர் என்று நான் குறிப்பிட்டபோது, அவர் மிக இயல்பாக சிரித்துக் கொண்டே, அதனால்தான் ராஜிவை நான் திருமணம் செய்தேன் எனக் கூறினார்
இவ்வாறு தமது புத்தகத்தில் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications