செக்ஸ் வீடியோ புகாரில் கொல்லப்பட்ட கிம் ஜாங் -உன் முன்னாள் காதலி: டிவியில் தோன்றி பரபரப்பு
பியாங்யாங்: செக்ஸ் வீடியோ புகாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட வடகொரிய அதிபரின் முன்னாள் காதலி டிவியில் உயிரோடு தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் முன்னாள் காதலி ஹியான் சாங்-உல். இவர் மொரன்பாங் என்ற இசை குழுவின் தலைவராக இருந்தார்.
ஹியான், உன்ஹாசு என்ற ஆர்க்கெஸ்ட்ரா இசை குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பிற மாநில இசை கலைஞர்கள் ஆகியோர் தங்களுக்குள் வைத்து கொண்ட பாலுறவினை வீடியோ எடுத்து வைத்திருந்தனர்.
சட்டப்படி குற்றம்
வட கொரிய நாட்டு சட்டப்படி செக்ஸ் வைத்து கொள்வதை படம் பிடிப்பது குற்றமாகும். இது வட கொரிய தலைவர் கிம்மிற்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டது.
சுட்டுக்கொலை
எனவே, கடந்த வருடம் கைது செய்யப்பட்ட கிம்மின் முன்னாள் காதலியான ஹியான் அதன் பின்பு மூன்று நாட்கள் கழித்து அவரது குடும்பத்தினரின் முன்னிலையிலேயே இயந்திர துப்பாக்கி கொண்டு சுட்டு கொல்லப்பட்டார்.
ஊடகங்களில் செய்தி
மற்ற இசை கலைஞர்களையும் இது போன்று துப்பாக்கி வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டனர். இதனை ஜப்பானின் அசாஹி ஷிம்பன் மற்றும் தென் கொரியாவின் ஊடகம் ஆகியவை கடந்த செப்டம்பரில் செய்தியாக தெரிவித்து இருந்தது.
தென்கொரிய உளவுப்பிரிவு
இந்த தண்டனை குறித்து தனக்கு தெரியும் என்று தென் கொரிய உளவு பிரிவு தலைவர் நம் ஜே-ஜூன் என்பவரும் கடந்த அக்டோபரில் தெரிவித்து இருந்தார். இதனால் அந்த செய்தி உண்மைதான் என நம்பும்படியாக இருந்தது.
அதிபர் மனைவியின் வாழ்க்கை
அதனுடன் அசாஹி வெளியிட்ட மற்றொரு செய்தியில், வட கொரிய தலைவரின் மனைவியும், முதல் குடிமகளுமான ரி சால்-ஜூ ஒரு பொழுதுபோக்குவாதி என்பதை மறைப்பதற்காகவும், அவரது வாழ்க்கை முறை குறித்து பரவிய வதந்திகளை தடுப்பதற்காகவும், இசை குழுவை சேர்ந்தவர்களை சுட்டு கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், ஹியான் உயிருடன் இருக்கிறாரா? அல்லது இல்லையா? என்பது தெரியாத நிலை இருந்தது.
டிவியில் தோன்றிய காதலி
இந்நிலையில், மாநில தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி ஹியான் பேசியுள்ளார். ஹியான் அந்நகரில் நடந்த தேசிய கலைஞர்களின் பேரணியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில், கிம்மின் தலைமைத்துவத்தை புகழ்ந்து ஹியான் பேசினார்.
பரபரப்பு கிளப்பிய காதலி
கலை மற்றும் ஆக்க பணிகளை வளர செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை தீவிரமாக எடுப்பதற்கு கிம் உறுதி மொழி ஏற்றதற்கும் தனது நன்றி என்று அவர் பேசியுள்ளதாக தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications